Home » News » Sports » CRICKET SMITH GOING STRONG AS AUSSIES GOING STRENGTH TO STRENGTH IN SYDNEY TEST MUT

பாவம் பும்ரா! 2வது பந்தே கேட்சை விட்ட விஹாரி; ஜடேஜா விலகல்; அசைக்க முடியாத ஸ்மித்- வலுக்கும் ஆஸி.

இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக கையில் பவுன்சரில் அடிவாங்கிய ஜடேஜா இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆனால் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாவம் பும்ரா! 2வது பந்தே கேட்சை விட்ட விஹாரி; ஜடேஜா விலகல்; அசைக்க முடியாத ஸ்மித்- வலுக்கும் ஆஸி.
லபுஷேனுக்கு கையில் வந்த கேட்சை விட்ட விஹாரி. | பவுலர் பும்ரா.
  • Share this:
ஹனுமா விஹாரி என்ற வீரர் சுத்த வேஸ்டாகி வருகிறார். பேட்டிங்கில் அவருக்கு ஒன்றுமே வரவில்லை, பீல்டிங்கில் கையில் வந்த கேட்சை இன்று ஆட்டம் தொடங்கியவுடனேயே நழுவ விட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணி மேலும் வலுவாகி 4ம் நாளான இன்று உணவு இடைவேளையின்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு
182 ரன்கள் எடுத்து மொத்தமாக 276 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக கையில் பவுன்சரில் அடிவாங்கிய ஜடேஜா இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆனால் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று காலை பும்ரா முதல் ஓவரை வீசினார். லபுஷேன் பேட்டிங் முனையில் பந்தை எதிர்கொண்டார். 2வது பந்து மிடில் அண்ட் லெக்கில் பிட்ச் ஆகி வந்தது லபுஷேன் பிளிக் செய்ய முயன்றார் அது நேராக அருகிலேயே ஸ்கொயர் லெக்கில் விஹாரி கைக்கு மிகவும் வாகாகச் சென்றது, ஆனால் விஹாரி கேட்சை நழுவ விட்டார். பும்ரா முகத்தில் இருகைகளையும் வைத்துக் கொண்டு அழாத குறையாக ஆகி விட்டார், கடும் கோபத்துடன் அடுத்த பந்தை வீசச்சென்றார். அப்போது 48 ன்களில் இருந்தார் லபுஷேன்.

பும்ரா, சிராஜ் மிகவும் டைட்டாக வீசினர். ஆஸி.யால் ரன்களை எடுக்க முடியவில்லை. கடைசியில் 82வது பந்தில் லபுஷேன் அரைசதம் கண்டார். அஸ்வினை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். சில பவுண்டரிகளை அடித்தார் கடைசியில் 117 பந்துகளில் 73 ரன்கள் என்று அவர் சைனி பந்தில் லெக் திசையில் சஹாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், பின்னால் சஹா இருந்ததால் இது கேட்ச் ஆனது, பந்த் இருந்திருந்தால் விட்டிருப்பார், சஹா இடது புறம் டைவ் அடித்து கேட்ச் செய்தார்.

103 ரன்கள் 3வது விக்கெட் கூட்டணி முடிவுக்கு வந்தது. ஸ்மித்தை அசைக்க முடியவில்லை. அவர் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இவருடன் கேமரூன் கிரீன் 20 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். இடையில் மேத்யூ வேட் 4 ரன்களில் சைனியின் அற்புதமான பந்தில் சஹாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கூடுதல் பவுன்சுக்கு இரையானார் மேத்யூ வேட்.

இந்தியா தற்போது ஜடேஜா இல்லாததால் 9 பேட்ஸ்மென்களுடன் ஆஸ்திரேலியத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி வரும். புஜாரா தன் பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டும். நின்று கொண்டே இருந்தால் பயன் இல்லை, கிரிக்கெட் என்பது பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுப்பதையும் பவுலர்கள் விக்கெட்டுகள் எடுப்பதையும் மட்டுமே கொண்ட ஆட்டம் என்பதை யாராவது அவருக்கு சொன்னால் நல்லது.
First published: January 10, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading