• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மேற்கிந்திய தீவு அறிமுக வீரரின் தலையை தாக்கிய பந்து.. ஸ்டெட்சரில் தூக்கிச்சென்றனர்

மேற்கிந்திய தீவு அறிமுக வீரரின் தலையை தாக்கிய பந்து.. ஸ்டெட்சரில் தூக்கிச்சென்றனர்

Jeremy Solozano

Jeremy Solozano

26 வயதாகும் மேற்கிந்திய தீவுகள் வீரர் இடது கை ஆட்டக்காரரான ஜெரிமி சொலோசானோ அறிமுக வீரராக களமிறங்கினார்.

  • Share this:
இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில், மேற்கு இந்திய தீவுகளின் அறிமுக வீரர் காயமடைந்து ஸ்டெட்சரில் அழைத்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக பிராத்வெயிட் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணி, இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இன்று இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே தனது அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

இந்தப் போட்டியில் 26 வயதாகும் மேற்கிந்திய தீவுகள் வீரர் இடது கை ஆட்டக்காரரான ஜெரிமி சொலோசானோ அறிமுக வீரராக களமிறங்கினார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 24வது ஓவரை ராஸ்டன் சேஷ் வீசியபோது, இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே எதிர்கொண்டார். பந்தை கருணரத்னே பலமாக அடித்தார். அப்போது பேட்ஸ்மேன் அருகே ஷார்க் லெக்கில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெரிமி சொலோசானோவின் ஹெல்மெட் மீது பலமாக தாக்கியது.

Also read:  ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு - SBI கூறும் விளக்கம்

பந்து பட்டதில் ஜெரிமி சுருண்டு மைதானத்தில் விழுந்தார். இதனையடுத்து மருத்துவக் குழுவினர் உடனடியாக மைதானத்துக்கு விரைந்தனர். பின்னர் ஜெரிமியின் நிலையை பரிசோதித்துவிட்டு அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்பதால் அங்கிருந்து ஸ்ட்ரெட்சரை வரவழைத்து ஜெரிமியை அவுட் ஃபீல்டுக்கு தூக்கிச் சென்றனர். அங்கே ஆம்புலன்ஸ் காத்துக் கொண்டிருந்தது, பின்னர் ஜெரிமியை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெரிமி சுயநினைவோடு இருப்பதாகவும் அவருக்கு காயத்தின் அளவை கண்டறிய தலையில் ஸ்கேன் எடுக்க இருப்பதாகவும், இதனுடைய ரிசல்ட் வந்த பிறகே அடுத்த போட்டியில் அவர் ஆடுவாரா இல்லையா என்பது தெரியவரும்.

Also read:  காவல் நிலையத்தில் புகுந்து பாஜகவினர் தாக்கியதாக திரிணாமுல் காங்கிரஸார் குற்றச்சாட்டு

அறிமுக வீரர் ஜெரிமி ஹெல்மெட்டில் காயமடைந்து சுருண்டு விழும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் அறிமுக வீரர் தனது முதல் போட்டியிலெயே காயமடைந்தது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் திமுத் கருணரத்னே சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதே போல தனஞ்செயா டிசில்வா அரை சதத்துடன் களத்தில் உள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: