”அது நம்மள நோக்கித்தான் வருது... படுங்க...'' இலங்கை - தென்னாப்பிரிக்கா போட்டியில் சுவாரஸ்ய நிகழ்வு

ICC World Cup 2019 | Srilanka vs SouthAfrica | தேனீக்கள் போட்டியில் குறுக்கிடுவது இந்த இரு அணிகளுக்கும் புதிதல்ல.

Vijay R | news18
Updated: June 28, 2019, 8:29 PM IST
”அது நம்மள நோக்கித்தான் வருது... படுங்க...'' இலங்கை - தென்னாப்பிரிக்கா போட்டியில் சுவாரஸ்ய நிகழ்வு
SLVSA
Vijay R | news18
Updated: June 28, 2019, 8:29 PM IST
உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பேட்டிங்கில் சொதப்பியதால் அனைத்து விக்கெட்களையும் இழந்து 203 ரன்கள மட்டுமே எடுத்தது.இலங்கை அணியில் எந்த வீரரும் 30 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை.

இந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் உதான, லக்மால் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மைதானத்தில் தேனீக்கள் கூட்டம் படையெடுத்தது. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க மைதானத்தில் இருந்த நடுவர்கள், வீரர்கள் அனைவரும் குப்பற படுத்துக் தங்களை காத்து கொண்டனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது.
Loading...தேனீக்கள் போட்டியில் குறுக்கிடுவது இந்த இரு அணிகளுக்கும் புதிதல்ல. 2017-ம் ஆண்டு இதே-போன்று இந்த இரு அணிகளும் மோதிய ஒரு நாள் போட்டியின் போது தேனீக்கள் குறுக்கிட்டதால் போட்டி ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2008-ம் ஆண்டு டெல்லி பெரஷ்லா கோட்லா மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட போட்டியின் போது தேனீக்கள் குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

Also Watch

First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...