• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பியது நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம் : அர்ஜுனா ரணதுங்கா காட்டம்

இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பியது நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம் : அர்ஜுனா ரணதுங்கா காட்டம்

அர்ஜுனா ரணதுங்கா

அர்ஜுனா ரணதுங்கா

இலங்கைக்கு டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்காக ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட அணி ராகுல் திராவிட் மேற்பார்வையில் சென்றுள்ளது. இப்படி இரண்டாம் தர அணியை அனுப்பி நம்மை அவமானப்படுத்துகின்றனர் என்று 1996 உலகக்கோப்பையை வென்ற அர்ஜுனா ரணதுங்கா காட்டமாகப் பேசியுள்ளார்.

  • Share this:
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் சரியாக மண்ணைக்கவ்விய இந்திய மூத்த வீரர்கள் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக அங்கேயே தங்கியுள்ளது.

    இதனையடுத்து இம்மாதம் நடைபெறும் டி20, ஒருநாள் தொடருக்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் புதிய அணியை பிசிசிஐ அனுப்பியுள்ளது.

    ஆனால் அர்ஜுனா ரணதுங்கா இதற்குக் காரணம் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகமே என்று சாடுகிறார். பணத்துக்காகவும், தொலைக்காட்சி மார்க்கெட்டிங் தேவைகளுக்காகவும் இப்படிப்பட்ட தொடரை ஏற்றுக் கொள்வது முறையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    “இது இரண்டாம் தர இந்திய அணி இப்படிப்பட்ட இந்திய அணி இங்கு வந்திருப்பது நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம். டெலிவிஷன் மார்க்கெட்டிங் தேவைகளுக்காக இப்படிப்பட்ட அணியுடன் ஆட ஒப்புக் கொண்டதற்காக நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே சாடுவேன்.

    சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டு பலவீனமான அணியை இங்கு அனுப்பியுள்ளனர், இதற்கு நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே நான் சாடுவேன்” என்றார் அர்ஜுனா ரணதுங்கா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஒன்று, இப்போது இருக்கும் இலங்கை அணிக்கு இந்த இந்திய அணிதான் சரியாக இருக்கும் என்ற வாதம் உண்மையென்றாலும், இந்த இலங்கை அணிஅந்த நாட்டின் பிரதான அணி, அது கால நேர சூழ்நிலைகளினால் பல்வேறு காரணங்களினால் இப்போது சரிவு நிலையில் உள்ளது, எனவே இந்த இலங்கை அணிக்கு இந்த இந்திய அணி போதும் என்பது பொருந்தாத வாதம்.

    இன்னொன்று இந்த இந்திய அணி ரணதுங்கா நினைப்பது போல் அவ்வளவு பலவீனமான அணி கிடையாது. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். இது போக சில அதிரடி டி20 வீரர்கள் உள்ளனர், தேவ் தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையெல்லாம் அவ்வளவு சுலபமாக இலங்கை எடைப்போட முடியாது என்பதுதான். அனைத்திற்கும் மேலாக பிரிதிவி ஷா டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர், பிரமாதமான பார்மில் உள்ளார், இவருக்கு முதலில் கையை சுத்த இலங்கையில் ஆள் இருக்கிறதா என்பதே சந்தேகம். மணீஷ் பாண்டே, சூரியகுமார் யாதவையெல்லாம் பலவீனமானவர்கள் என்றால் அர்ஜுனா ரணதுங்காவுக்கு இந்திய அணியின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: