என்னப்பா நடக்குது.. ஆஸி. டெஸ்ட் அணியில் 6 வயது சிறுவன்!

Six year old #ArchieSchiller joins Australia practice session | டிசம்பர் 26-ம் தேதியான ‘பாக்சிங் டே’ அன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் 6 வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற உள்ளார். #INDvAUS #AUSvIND

Web Desk | news18
Updated: December 4, 2018, 2:16 PM IST
என்னப்பா நடக்குது.. ஆஸி. டெஸ்ட் அணியில் 6 வயது சிறுவன்!
ஆஸ்திரேலிய அணியில் ஆர்ச்சி ஷில்லர் (நடுவில்) (Cricket Australia)
Web Desk | news18
Updated: December 4, 2018, 2:16 PM IST
இந்தியா உடனான டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் 6 வயது சிறுவன் இடம்பெற்றுள்ளது சர்வதேச கிரிக்கெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (6-ம் தேதி) அடிலெய்டில் தொடங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர்கள் வலைப்பயிற்சி செய்தபோது, அவர்களுடன் 6 வயது சிறுவனும் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

“ஆஸ்திரேலிய அணியில் புதிதாக ஒரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். அணியின் வலைப்பயிற்சியில் அவரும் இடம்பெற்றுள்ளார். டிசம்பர் 26-ம் தேதியான ‘பாக்சிங் டே’ அன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பெறுவார்” என்று கூறப்பட்டது.
Loading...
ஆர்ச்சி ஷில்லர் என்ற 6 வயது சிறுவன் இதய வால்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கிரிக்கெட் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளது. என்றாவது ஒருநாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆக வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். இந்த தகவலை அறிந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், அவரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு அணியில் சேர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.தான் ஒரு லெக் ஸ்பின்னர் என்று கூறும் ஆர்ச்சி ஷில்லர், விராட் கோலியை வீழ்த்துவேன் என்றும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும்  பார்க்க...

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்