பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் இதுவரை 7 விக்கெட்டுகளையும் 67 ரன்களையும் அடித்து இந்திய அணியின் நீண்ட நாளைய அதிரடி ஆல்ரவுண்டர் கனவைப் பூர்த்தி செய்வாரா ஷர்துல் தாக்குர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதன் முதலில் கேரி சோபர்ஸ் 1968-ல் மால்கம் நாஷ் என்ற பவுலரின் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார், அப்போது ஷர்துல் தாக்குர் பிறக்கவில்லை, இதே சாதனையை பரோடாவின் திலக் ராஜ் என்ற பவுலருக்கு எதிராக ரவி சாஸ்திரி 1985-ல் ஒரு ஓவரில் 6 சிக்சர்களை விளாசி சமன் செய்த போதும் ஷர்துல் தாக்குர் பிறக்கவில்லை.
ஆனால் இவையெல்லாம் ஏதோ கர்ப்பத்தில் இருந்த போது கேட்ட கதை போல் ஷர்துல் தாக்குர் 2006ம் ஆண்டு 15 வயது பாலகனாக ஸ்வாமி விவேகானந்தா சர்வதேசப்பள்ளிக்காக ஒரு ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார். டாக்டர் ராதாகிருஷ்ணா சர்வதேசப் பள்ளிக்கு எதிராகவே அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்ட இவரது பேட்டிங் திறமைகளைக் கண்டு பயிற்சியாளர்களே அதிசயித்தனர்.
கோச் தினேஷ் லாத் என்பவர் இது தொடர்பாக தி இந்து ஸ்போர்ட்ஸ்டாருக்கு கூறும்போது, “அந்த வயதில் அது தைரியமான இன்னிங்ஸ். ஷர்துல் எப்போதும் நல்ல பவுலர் அந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்தார், பிறகு இப்படி ஒரு அதிரடி இன்னிங்ஸை ஆடினார்” என்றார்.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார் ஷர்துல், 186/6 என்ற நிலைமையில் இறங்கி, கமின்ஸ் ஏதோ இந்தியா முடிந்து விடும் என்பது போல் ஒரு பவுன்சரை வீச அது ஸ்கொயர்லெக்குக்கு சிக்ஸ் ஆக பறந்தவுடன் கடுப்பை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே வந்தார். 8ம் நிலையில் இறங்கி 3வது அதிகபட்ச ஸ்கோரை (67) ஆஸ்திரேலியாவில் எடுத்த சாதனையையும் நிகழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸில் டெஸ்ட் அறிமுகம் ஆன ஷர்துல், காயத்தினால் துரதிர்ஷ்டவசமாக வெளியேற நேரிட்டது. இவரது பேட்டிங் திறமைகள் பெரிய மட்டத்தில் அவ்வளவாக வெளிப்பட்டதில்லை, 2014-ல் கான்பூர் வேகப்பந்து சாதக ஆட்டக்களத்தில் ஷர்துல் 100 பந்துகளில் 87 ரன்களை விளாசியதை மும்பை கிரிக்கெட் வட்டாரம் மறக்க வாய்ப்பில்லை.
மகாராஷ்டிரா பால்காரிலிருந்து 12 கிமீ தொலைவில் இருந்த ஷர்துல், தன் பாலிய காலங்களில் தினமும் காலையில் எழுந்து பயிற்சிகாக விரைவில் கிளம்பி 10.30 மணிக்குத்தான் வீடு திரும்புவார். போரிவாலிக்கு தினமும் ரயிலில்தான் பயணம்.
தாக்கூரின் தந்தை நரேந்திரா ஒரு பிரபல உள்ளூர் கிரிக்கெட் வீரரும் விவசாயியும் ஆவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, India vs Australia, Shardul thakur