இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் யார்? போட்டியில் 6 பேர்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் யார்? போட்டியில் 6 பேர்!
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளர் பந்தயத்திற்கான இறுதிப் பட்டியலில் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ராபின் சிங் உட்பட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்களை பெற்று, தகுதியின் அடிப்படையில் 6 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.


இதில், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர் ராபின் சிங் மற்றும் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் ஆகிய 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், இலங்கை முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, ஆப்கானிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் ஆகிய 3 வெளிநாட்டினர் பட்டியலில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த வார இறுதியில் கபில் தேவ் தலைமையில் மும்பையில் நடைபெறும் நேர்காணலில் இந்த 6 பேரும் பங்கேற்கவுள்ளனர்.மேற்கிந்திய தீவுகள் பயணத்தில் உள்ள ரவி சாஸ்திரி காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.

இதன் முடிவில் புதிய பயிற்சியாளர் யார் என்பது குறித்து அன்றைய தினம் அல்லது அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் பயணம் செல்வதற்கு முன், ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக நீடிக்க கூடும் என கேப்டன் விராட் கோலி கூறியதால், அவருக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்