Home /News /sports /

சிராஜ் அசத்தல்: பாகிஸ்தான் நட்சத்திர வீரரை 2 இன்னிங்ஸ்களிலும் ‘பேக்’ செய்து அனுப்பினார்

சிராஜ் அசத்தல்: பாகிஸ்தான் நட்சத்திர வீரரை 2 இன்னிங்ஸ்களிலும் ‘பேக்’ செய்து அனுப்பினார்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்

கவுண்டி கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ் தான் ஆடும் முதல் போட்டியிலேயே முதல் இன்னிங்சில் 82 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inte, Indiabirminghambirminghambirminghambirmingham
    கவுண்டி கிரிக்கெட் போட்டியில் வார்விக்‌ஷயர்-சாமர்செட் அணிகள் இடையிலான ஆட்டம் பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இதில் வார்விக்‌ஷயர் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தான் ஆடும் முதல் போட்டியிலேயே முதல் இன்னிங்சில் 82 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    சிராஜ், பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக், ஜார்ஜ் பார்ட்லெட், ஜேம்ஸ் ரியூ, லூயிஸ் கிரிகரி, மற்றும் ஜோஷ் டேவி ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சாமர்செட் அணி 219 ரன்களுக்கு சுருண்டது.

    இந்திய ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ், இவரும் வார்விக்‌ஷயர் அணிக்கு ஆடுகிறார். இவர் 14 ஓவர்கள் வீசி 42 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார். திரும்பவும் ஆடிய வார்விக்‌ஷயர் அணி 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் பேட்டிங்கில் சிராஜ் 34பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
    இதில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் இமாம் உல் ஹக்கை முதல் இன்னிங்சில் 5 ரன்களுக்கு வீட்டுக்கு அனுப்பியதோடு 2வது இன்னிங்சில் அவரை டக் அவுட்டாக்கினார்.

    மூன்றாம் நாள் முடிவில்  சாமர்செட் அணி  277/4  என்ற நிலையில் உள்ளது. ஜார்க் பார்லெட்டி 91 ரன்கள், லிவிஸ் கோல்ட்ஸ்வோர்த்தி 44 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Cricket, Mohammed siraj, Pakistan cricket

    அடுத்த செய்தி