ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

காலாவதியான பழைய முறையில் ஆடும் இந்திய அணி 2011 உலகக்கோப்பைக்கு பின் சாதித்தது என்ன? விளாசிய மைக்கில் வாகன்

காலாவதியான பழைய முறையில் ஆடும் இந்திய அணி 2011 உலகக்கோப்பைக்கு பின் சாதித்தது என்ன? விளாசிய மைக்கில் வாகன்

மைக்கில் வாகன் விளாசல்

மைக்கில் வாகன் விளாசல்

இங்கிலாந்து அணிக்கு எதிராக படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியை மைக்கில் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மரண அடி வாங்கியது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்து இந்தியாவின் உலகக்கோப்பை கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. பவுலர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறியது ஒருபுறம் இருந்தாலும் முதல் பத்து ஓவர்களில் இந்திய அணி மெதுவாக விளையாடி கடைசி 10 ஒவர்களில் சீறி பாய்ந்தது. 50 ஒவர் போட்டிகளில் கடைசி 10 ஓவர்கள் அடித்து விளையாடும் பழைய பாணியை இந்திய அணி கடைபிடித்து வருவதாக பலரும் விமர்சித்து வந்தனர்.

  பாகிஸ்தான் அணிக்கும் எதிரான போட்டியிலும் இந்திய அணி இந்த ஃபார்முலாவை தான் பின்பற்றியது. ஆனால் ஏதோ ஒரு கிளிக்கில் அந்த போட்டியில் இந்தியா பக்கம் காற்று வீசியது. கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் அதற்கு முன்வரை ஸ்லோ பேட்டிங் ஃபார்முலாவில் தான் இருந்தனர். மற்ற அணிகள் எல்லாம் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டும் நிலையில் இந்திய அணி மட்டுமே கிரிக்கெட்டில் இன்னும் ஆதிகாலத்திலே உள்ளது.

  இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் வாகன் இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது, இந்திய அணி 2011 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பின் சாதித்தது என்ன? ஒன்றுமே மாறவில்லை. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் காலாவதியான பழைய முறையிலே இந்திய அணி இன்றுவரை கிரிக்கெட் விளையாடி வருகிறது.

  Also Read : இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி.. இந்திய அணியில் வரவிருக்கும் பல்வேறு மாற்றங்கள்

  வெள்ளை பந்து கிரிக்கெட் இந்திய அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடிய மற்ற நாட்டு வீரர்கள் திறனை எப்படி வளர்த்து கொண்டார்கள் என்று கூறுகின்றனர். ஆனால் இது வரை இந்தியாவிற்கு எந்தவிதமான பலனையும் தரவில்லை.

  கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் நிபுணர்கள் இது குறித்து அவர்கள் பேசவில்லை. அவர்கள் வேலையிழந்துவிடுவோம் என கவலைப்படுகின்றனர். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியா திறம்பட பேட்டிங் செய்யவில்லை. சுழற்பந்து யுக்திகளும் எதுவுமில்லை“ என்றும் கூறியுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: India Vs England, T20 World Cup