ஆஸ்திரேலிய ஜாம்பவான் லெக்ஸ்பின்னர் ஷேன் வார்ன் அவ்வப்போது டாப் 10 என்று ஏதாவது பட்டியல் வெளியிடும் பழக்கமுள்ளவர். இந்த முறை டாப்-5 பேட்டர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு முதலிடம் வழங்கிய ஷேன் வார்ன், ஜோ ரூட்டுக்கு 2ம் இடமும், கேன் வில்லியம்சனுக்கு 3ம் இடமும், விராட் கோலிக்கு 4ம் இடமும், மார்னஸ் லபுஷேனுக்கு 5ம் இடமும் வழங்கியுள்ளார்.
உண்மையில் டாப்-5-ல் கோலிக்குப் பதில் அல்லது லபுஷேனுக்குப் பதில் பாபர் ஆசமைத்தான் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் ஷேன் வார்ன் பாபர் ஆசம் இன்னிங்சை பார்த்ததில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், முதலாவதாக ஸ்டீவன் ஸ்மித்தை தேர்வு செய்வதாகக் கூறினார். “ஸ்மித்தை முதல் வீரராக தேர்வுசெய்ய விரும்புகிறேன். அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய அற்புதமான வீரர்” எனக் கூறினார்.
ஸ்மித், டெஸ்டில் அதிவிரைவாக 7,000 ரன்களை கடந்த வீரராக இருக்கிறார். ரூட், வில்லியம்சன்: அடுத்த இரண்டு இடங்களை இங்கிலாந்து அணிக் கேப்டன் , நியூசிலாந்து அணிக் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு வார்ன் வழங்கியுள்ளார். “ஜோ ரூட்டிற்கு இரண்டாவது இடத்தை கொடுக்க விரும்புகிறேன். இந்த ஆண்டில் மட்டும் 6 சதங்களை அடித்திருக்கிறார். கேன் வில்லியம்சனும் சிறந்த வீரர்தான். ஆனால், ரூட்டைவிட சற்று பின்தங்கியுள்ளார். இதனால், வில்லியம்சனுக்கு மூன்றாவது இடத்தை வழங்குகிறேன்” என்றார்.
ஜோ ரூட், இந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் விளையாட வந்த அவர், தொடர்ந்து மூன்று சதங்களை விளாசி அசத்தியிருந்தார். கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றியிருந்தது. மேலும் கூறிய ஷேன் வார்ன் “விராட் கோலிக்கு நான்காவது இடம்தான். காரணம், அவர் 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக ரன்களை குவிக்கவில்லை. இதுதான் அவரது பின்னடைவுக்குக் காரணம். மார்னஸ் லபுஷேனுக்கு 5ஆவது இடத்தை வழங்க விரும்புகிறேன்” என்றார்.
லபுஷேன் 19 டெஸ்ட்களில் 1959 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாகத்தான் பாகிஸ்தான் அணிக் கேப்டன் பாபர் அசாமுக்கு இதில் இடம் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த வருடம் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Year Ender 2021: 2021-ல் அதிகம் தேடப்பட்ட ஆளுமைகளில் மோடிக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி
மேலும் விராட் கோலி ஒரே மாதிரி ஆட்டமிழந்து வருவது எந்த ஒரு கிரேட் பேட்டருக்கும் நடக்காது. விராட் கோலி ஒரு நல்ல பேட்டர் என்று கூறலாமே தவிர கிரேட் என்று ஏன் கூற முடியாது என்றால், 3 அவுட் ஸ்விங்கரை வீசி ஒரு இன்ஸ்விங்கரை வீசினால் எல்.பி.ஆகிறார். அல்லது 3 இன்ஸ்விங்கரை வீசி, 1 அவுட் ஸ்விங்கரை வீசினால் கோலி எட்ஜ் செய்து விடுவார், உலகின் எந்த கிரேட் பிளேயருக்கும் இப்படி நடக்காது. கிரேட் பிளேயர் என்பது வெறும் ரன் குவிப்பு மட்டுமல்ல என்பதுதான் விஷயம். கெவின் பீட்டர்சன் ஒரு கிரேட் பிளேயர். அதே போல் அதிக ரன்களைக் குவிக்காத கிரேம் ஹிக் ஒரு கிரேட் பிளேயர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Steve Smith, Virat Kohli