Home /News /sports /

‘வாயை மூடிட்டுப் போய் விளையாடு’- பேர்ஸ்டோவை கோலி செய்த ஸ்லெட்ஜிங்

‘வாயை மூடிட்டுப் போய் விளையாடு’- பேர்ஸ்டோவை கோலி செய்த ஸ்லெட்ஜிங்

விராட் கோலி

விராட் கோலி

Ind vs Eng 5th Test: எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் நேற்று ஜானி பேர்ஸ்டோ அதிரடி சதம் கண்டார். 64 பந்துகளில் ஏகப்பட்ட பீட்டன்கள், அதிர்ஷ்டங்களுடன் 16 ரன்கள் எடுத்த அவர் அதன் பிறகு 119 பந்துகளில் சதம் கண்டார், பிறகு 106 பந்துகளில் முகமது ஷமியிடம் ஆட்டமிழந்தார். இடையில் விராட் கோலி அவரை ஸ்லெட்ஜிங் செய்தார். இந்த ஸ்லெட்ஜிங்தான் இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் நேற்று ஜானி பேர்ஸ்டோ அதிரடி சதம் கண்டார். 64 பந்துகளில் ஏகப்பட்ட பீட்டன்கள், அதிர்ஷ்டங்களுடன் 16 ரன்கள் எடுத்த அவர் அதன் பிறகு 119 பந்துகளில் சதம் கண்டார், பிறகு 106 பந்துகளில் முகமது ஷமியிடம் ஆட்டமிழந்தார். இடையில் விராட் கோலி அவரை ஸ்லெட்ஜிங் செய்தார். இந்த ஸ்லெட்ஜிங்தான் இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

    அதாவது முகமது ஷமி, பும்ராவை காலையில் பேர்ஸ்டோவுக்கு சரியாக ஆடவரவில்லை,  திணறினார். கோலி பயங்கரமாக அதை எஞ்ஜாய் செய்தார், அவர்தான் கேப்டன்சி செய்வது போல்தான் தெரிகிறது, குறைந்தது களவியூகம் அவர்தான் அமைக்கிறார் எனலாம். அதனால் தான் கேப்டனாக இருந்த அதே கோணங்கி சேட்டைகளை மீண்டும் காட்டினார்.

    ஆனால் இங்கிலாந்து ஊடகங்கள், மைக்கேல் வான் போன்றவர்கள் பேசும் திமிர் பேச்சுக்கு குறைந்தது இந்த ஸ்லெட்ஜிங்காவது செய்யாமல் இருக்க முடியுமா? பேர்ஸ்டோவை நோக்கி, “என்ன! சவுதி பந்து போல் இல்லையா?, இதை அடிக்கணும் அதான் பேட்டிங்’ என்ற ரீதியில் ஏதோ சொல்லப்போக, பேர்ஸ்டோ பதிலுக்கு ஏதோ சொல்ல, கோலி, “வாயை மூடிட்டுப் போய் பேசாம ஆடி போ” என்று கூறினார்.



    கடைசியில் பேர்ஸ்டோ ஷமி பந்தில் அவுட் ஆகிச் சென்ற போது பிளையிங் கிஸ் என்பதை விட கையை ஊதி, உன்னை ஊதிவிடுவோம் என்று கூறியது போல செய்கை செய்தார் கோலி.

    இது பெரிய தூண்டுகோலாக அமைய பேர்ஸ்டோ அதன் பிறகு வெளுத்து வாங்கி விட்டார். இப்போது சொந்த பேட்டிங்கில் திணறும் விராட் கோலி பார்மில் இருக்கும் பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜ் செய்யலாமா என்பதாக உருவெடுத்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Sledge, Virat Kohli

    அடுத்த செய்தி