ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

1 ரன்னில் உலக சாதனையை தவறவிட்ட சுப்மன்கில்… ரசிகர்கள் ஏமாற்றம்…

1 ரன்னில் உலக சாதனையை தவறவிட்ட சுப்மன்கில்… ரசிகர்கள் ஏமாற்றம்…

சுப்மன் கில்

சுப்மன் கில்

சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் ரோஹித் சர்மா சதம் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய அணி வீரர் சுப்மன் கில் 1 ரன்னில் உலக சாதனை ஒன்றை தவற விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்திய அணி தொடரை வென்றுள்ள நிலையில் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இன்றைய ஆட்டத்தில் 2 மாற்றங்களை கேப்டன் ரோஹித் சர்மா செய்திருந்தார். முகம்மது ஷமி மற்றும் சிராஜிற்கு பதிலாக உம்ரான் மாலிக் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் டி20 மேட்ச்சைப் போல விளையாட ஆரம்பித்து ரன்களை குவித்தார்கள்.  33 பந்துகளில் சுப்மன் கில் அரைச் சதம் அடித்தார். 72 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 112 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்னர் பந்துவீச்சில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் மூலம் அவர் 1 ரன்னில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமின் சாதனையை முறிடியக்கும் வாய்ப்பை தவற விட்டார்.  தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் என்ற அடிப்படையில் 360 ரன்கள் எடுத்து பாபர் ஆசம் சாதனை ஏற்படுத்தியிருந்தார்.

அதனை சுப்மன் கில் இன்றைய ஆட்டத்தில் முறியடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், 3 போட்டிகளில் 360 ரன்கள் எடுத்து பாபர் ஆசமின் சாதனையை சுப்மன் கில் சமன் மட்டுமே செய்துள்ளார். ஒரேயொரு ரன்னில் சாதனை தவறவிடப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மாவும் சதம் அடித்துள்ளார்.சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் சதம் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

First published:

Tags: Cricket