ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் சாதனைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் டி20 போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பானதாக இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் 360 ரன்கள் குவித்தார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். இதன் மூலம் 3 போட்டிகள் தொடரில் அதிகமான ரன்களை குவித்தவர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமுடன் சமன் செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவது ஃபார்ம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ், வாஷிங்டன் சுந்தரை தவிர்த்து மற்றவர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் 7 மற்றும் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த போட்டி குறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பானதாக இல்லை. இஷான் கிஷன் மிக எளிதாக போல்டாகி வெளியேறினார். கடந்த 12 இன்னிங்ஸ்களில் அவரது அதிகபட்ச ரன் 36 ஆக உள்ளது. டி20 இன்னிங்ஸ்களை பொருத்தளவில் சுப்மன் கில்லின் ஆட்டம் சிறப்பானதாக இல்லை.
ராகுல் திரிபாதி இளம் வீரர். அவர் இப்போதுதான் சர்வதேச கெரியரை தொடங்கியிருக்கிறார். அவர் அவுட் ஆனபோது டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தி இருந்திருக்கலாம். சூர்யகுமார் மற்றும் ஹர்திக் யாதவ் ஆகியோர் நம்பிக்கை ஏற்படுத்தினர். களத்தில் சூர்யா இருந்தவரையில் நம் நம்பிக்கை நீடித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல் டி20யில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket