ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘சுப்மன் கில் ஒரு மினி ரோஹித் சர்மா’ – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டு

‘சுப்மன் கில் ஒரு மினி ரோஹித் சர்மா’ – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டு

சுப்மன் கில்

சுப்மன் கில்

இந்திய அணிக்கு பேட்டிங் எப்போதுமே கைகொடுக்கும். ஏனென்றால் ரோஹித் சர்மாவை போன்ற அபாரமான பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுப்மன் கில் ஒரு மினி ரோஹித் சர்மா என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார் சுப்மன் கில். இந்த போட்டியில் 208 ரன்கள் எடுத்த சுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்தினார்.

விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தனர். இதனை 19 இன்னிங்ஸ்களில் கில் கடந்துள்ளார். இதன் மூலம் விவியன் ரிச்சர்ட்ஸ், பாபர் ஆசம், கெவின் பீட்டர்சன், ஜோனதன் ட்ராட், குவின்டன் டி காக், ரேஸி வாண்டர்சன் உள்ளிட்டோரின் சாதனைகளையும் முறியடித்துள்ளார். 23 வயதாகும் இவர் 20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவரது சராசரி 71.38 ரன்னாக உள்ளது. சுப்மன் கில் தொடர்ந்து ஃபார்மில் இருப்பதால் அவர் மீதான கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது.

சுப்மன் கில் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரரும வர்ணனையாளருமான ரமிஸ் ராஜா கூறியதாவது-  என்னைப் பொருத்தவரையில் சுப்மன் கில் மினி ரோஹித் சர்மாவைப் போன்று இருக்கிறார். அவரது பேட்டிங் தோற்றம் சிறப்பாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அவர் இன்னும் அதிரடியாக விளையாடுவார். அவரது ஸ்டைலை மாற்றத் தேவையில்லை. சமீபத்தில்தான் அவர் இரட்டை சதம் அடித்துள்ளார். இந்திய அணிக்கு பேட்டிங் எப்போதுமே கைகொடுக்கும். ஏனென்றால் ரோஹித் சர்மாவை போன்ற அபாரமான பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். ஹூக் மற்றும் புல் ஷாட்களை சர்வ சாதாரணமாக ரோஹித் சர்மா அடிப்பார். பவுலிங்கில் இந்திய எழுச்சி பெற்றதால்தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியிடம் பேட்டிங் எப்போதுமே சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Cricket