முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ரிஷப் பந்த் இடத்தை ஷ்ரேயாஸ் நிரப்புவார்’ – அஷ்வின் நம்பிக்கை…

‘ரிஷப் பந்த் இடத்தை ஷ்ரேயாஸ் நிரப்புவார்’ – அஷ்வின் நம்பிக்கை…

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர்

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி, கடைசியாக 2004 -ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரிஷப் பந்த் இடத்தை ஷ்ரேயாஸ் ஐயர் நிரப்புவார் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார். விபத்து காரணமாக ரிஷப் பந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்க முடியாத நிலை உருவாகி உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வியாழனன்று நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதலிடத்தில் உள்ளது.

இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான அந்த அணியின் ரெக்கார்டுகள் மோசமானதாக உள்ளன. இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி, கடைசியாக 2004 -ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதன் பின்னர் நடந்த எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும், இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் வெல்ல முடியவில்லை. இந்த மோசமான சாதனையை இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி முடிவுக்குக் கொண்டு வருமா என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அந்த அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் பேட் கம்மின்ஸ், ஹஸல்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்களாக வருகின்றனர். இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக, தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், ரிஷப் பந்த் இடம்பெறாதது குறித்து, இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது- டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் ரிஷப் பந்த் உடன் இணைந்து ஷ்ரேயாஸ் ஐயர் திறமையான ஆட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதனடிப்படையில் ரிஷப் பந்த்திற்கு ஷ்ரேயாஸ் சற்றும் குறைந்தவர் அல்ல. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அவர் முதுகெலும்பாக இருந்திருக்கிறார். ரிஷப் பந்த் இல்லாத சூழலில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் முக்கியமான ஆட்டக்காரராக இருப்பார். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket