முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷ்ரேயாஸ் இடம்பெற மாட்டார்… 2 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷ்ரேயாஸ் இடம்பெற மாட்டார்… 2 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு…

ஷ்ரேயாஸ் அய்யர்

ஷ்ரேயாஸ் அய்யர்

ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2 முக்கிய வீரர்களில் ஒருவர் ஆடும் லெவனில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் ஷ்ரேயாஸ் அய்யர் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் இடம்பெறாத நிலையில், அணி மிடில் ஆர்டர் வரிசையில் சற்று தடுமாறியது.

வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில் ஷ்ரேயாஸ் முக்கிய பங்கு வகித்தார். இந்த தொடரின்போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஷ்ரேயாஸ் இன்னும் குணம் அடையவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷ்ரேயாஸ் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இணை தொடக்க வீரர்களாக களத்தில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மிடில் ஆர்டர் வரிசையில் சுப்மன் கில் அல்லது சூர்ய குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஏ அணியில் சுப்மன் கில் இடம்பெற்றிருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் ஒன்றில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்துள்ளார். இதேபோன்று ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது.

First published:

Tags: Cricket