முகப்பு /செய்தி /விளையாட்டு / ஷார்ட்பிட்ச் பந்துக்கு எதிராகத் தடுமாறும் ஸ்ரேயஸ் அய்யர் கோலிக்கு மாற்றா?- சீறும் பயிற்சியாளர்

ஷார்ட்பிட்ச் பந்துக்கு எதிராகத் தடுமாறும் ஸ்ரேயஸ் அய்யர் கோலிக்கு மாற்றா?- சீறும் பயிற்சியாளர்

ஸ்ரேயஸ் அய்யர்

ஸ்ரேயஸ் அய்யர்

என்னை பொறுத்தவரையில் இந்த இடத்திற்கு அவர் இன்னும் தகுதியானவராக மாற வேண்டும்”

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஷ்ரேயஸ் அய்யர் ஷார்ட் பிட்ச் பந்துகளை படுமோசமாக ஆடி ஆட்டமிழப்பவர் என்பது ஊரறிந்த கதை, ஆனால் அவர் அதில் மேம்பட கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க விராட் கோலிக்கு மாற்றாக ஸ்ரேயஸ் அய்யரைக் கருதலாமா என்று விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கேள்வி எழுப்புகிறார்.

விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் விராட் கோலி ஓய்வு எடுத்துள்ளதால் அவருக்கு பதில் 3வது பேட்டிங் லைன்-அப்பாக களமிறங்கி விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்தார்.

இதனையடுத்து ஒரு சில தரப்பில் விராட் கோலிக்குப் பதில் ஸ்ரேயஸ் அய்யரை 3ம் நிலையில் நிரந்தரமாகக் களமிறக்க வேண்டும் என்று பேசியும் எழுதியும் வருகின்றன. இது குறித்து பேசிய ராஜ்குமார் சர்மா, “

இதை நான் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன் விராட் கோலிக்கு பதில் இந்திய அணியின் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய தகுதியான ஒரு வீரர் கிடையாது, ஆனால் அந்த இடத்தில் இளம் வீரர்களை பயிற்றுவிக்க வேண்டும், மேலும் அந்த இடத்தில் பல்வேறு விதமான சோதனை முயற்சிகளை செய்து பார்க்க வேண்டும்.

ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்திற்கு தகுதியானவர் என்பது தேவையில்லாத ஒன்றாகும், ஸ்ரேயாஸ் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சற்று தடுமாறுகிறார். குறிப்பாக ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் திணறுகிறார். மேலும் கடந்த கால வரலாற்றில் அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அதிகமாக தன்னுடைய விக்கெட்டை இழந்துள்ளார்.

என்னை பொறுத்தவரையில் 4 அல்லது 5வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்வது தான் சிறந்தது, மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் பேட்டிங் செய்யும்பொழுது பந்து அந்த அளவிற்கு ஸ்விங்காகவில்லை மேலும் அவருக்கு நேராகவும் பந்து வீசப்படவில்லை. என்னை பொறுத்தவரையில் இந்த இடத்திற்கு அவர் இன்னும் தகுதியானவராக மாற வேண்டும்” என்றார்.

First published:

Tags: Shreyas Iyer, Virat Kohli