தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தூரில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற 2வ-து போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ராஞ்சியில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான சதம் மற்றும் இஷான் கிஷான் பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணி வெற்றியை தன்வசப்படுத்தியது. ஸ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு நாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயரின் 2-வது சதம் இதுவாகும்.
Also Read : கேட்ச் பிடிக்க வந்த மார்க் வுட்.. கையை வைத்து தடுத்த மேத்யூ வேட் ? - என்ன தான் நடந்தது
ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த சதம் மூலம் விராட் கோலியின் தனித்துவமான சாதனை பட்டியலில் அவரும் இணைந்துள்ளார். அதன்படி ராஞ்சி மைதானத்தில் விராட் கோலிக்கு அடுத்து சதம் அடித்த 2-வது இந்திய வீரர் ஸ்ரோயஸ் ஐயர் தான். விராட் கோலி ராஞ்சியில் 2014-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 139 ரன்களும் 2019-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 139 ரன்களும் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் ராஞ்சியில் சதம் அடித்த வீரர்களில் 4-வது வீரர். ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி தவிர இலங்கை வீரர் ஆஞ்சிலோ மேத்யூஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மன் கவாஜா ராஞ்சியில் சதமடித்துள்ளனர்.
ராஞ்சியில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க வீரர் ஏய்டன் மாக்ரம் 79 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து விளைாயடிய இந்திய அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். இஷான் கிஷான் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 113 ரன்களும் சேர்த்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shreyas Iyer, Virat Kohli