Home /News /sports /

விராட் கோலியின் இந்த சாதனையும் போச்சா?- பேட்டிங் 3ம் நிலையையும் கோரும் ஸ்ரேயஸ் அய்யர்

விராட் கோலியின் இந்த சாதனையும் போச்சா?- பேட்டிங் 3ம் நிலையையும் கோரும் ஸ்ரேயஸ் அய்யர்

விராட் கோலி சாதனையை முறியடித்த அய்யர்

விராட் கோலி சாதனையை முறியடித்த அய்யர்

இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்ரேயஸ் அய்யர். அதுமட்டுமின்றி  3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில்  ஸ்ரேயஸ் அய்யர் 204 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் விராட் கோலி 199 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

மேலும் படிக்கவும் ...
    3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் அய்யர் 204 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஸ்ரேயஸ் அய்யர் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகளிலும் அரைசதம் விளாசி தொடர் நாயகன் விருதை அள்ளிச்சென்றார்.

    இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்ரேயஸ் அய்யர். அதுமட்டுமின்றி  3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில்  ஸ்ரேயஸ் அய்யர் 204 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் விராட் கோலி 199 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இப்போது விராட் கோலியின் இந்த சாதனையையும் ஸ்ரேயஸ் அய்யர் முறியடித்து விட்டார்.

    இந்நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    வெளிப்படையாக இந்த வடிவத்தில், உங்கள் இன்னிங்ஸை நீங்கள் நன்றாக வேகப்படுத்தக்கூடிய ஒரே இடம் முதல் மூன்று இடங்களில் இறங்குவதுதான்.  இல்லையெனில், நீங்கள் கீழ்வரிசையில் பேட் செய்தால், முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்க வேண்டும், அது பெரிய ரிஸ்க். எனவே ஆம், தனிப்பட்ட முறையில் எனக்காக பேட் செய்ய சிறந்த நிலையை நான் சொல்ல வேண்டும் என்றால், அது வெளிப்படையாகவே நம்பர் 3-ல் இறங்குவதுதான், என்றார் ஸ்ரேயஸ் அய்யர்.

    விராட் கோலி இந்த டவுனில்தான் இறங்கி வந்தார், இப்போது விராட் கோலி மாதிரியே பேட் செய்யும் ஸ்ரேயஸ் அய்யர், அவரது டி20 சாதனையைக் காலி செய்ததோடு அவரது 3ம் நிலைக்கும் போட்டியாக வந்துள்ளார்.

    இதையும் படிங்க: Covid-19 : ஹாங்காங்கில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு: சவக்கிடங்குகளும் அதிகரிப்பு
     இந்த மாத தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் எடுத்ததையும் உள்ளடக்கினால் தனது கடைசி ஐந்து போட்டிகளில் ஸ்ரேயஸ் இப்போது நான்கு அரைசதங்களைப் பெற்றுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs srilanka, Shreyas Iyer, Virat Kohli

    அடுத்த செய்தி