ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஷ்ரேயஸ் ஐயர் இஷான் கிஷன் அதிரடி.. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி..

ஷ்ரேயஸ் ஐயர் இஷான் கிஷன் அதிரடி.. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி..

ஷ்ரேயஸ் ஐயர் - இஷான் கிஷன் ஜோடி

ஷ்ரேயஸ் ஐயர் - இஷான் கிஷன் ஜோடி

7 சிங்கிள்கள் எடுத்து சத்தை எடுத்திருக்க முடியும். ஆனால் நான் அணிக்காக விளையாடாமல் எனக்காக விளையாடி இருந்தால், நான் ரசிகர்களை சிறுமைபடுத்துவதாக இருக்கும் என இஷான் கிஷன் பேட்டி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ranchi, India

  தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, நேற்று ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 79 ரன்களையும், ஹென்றிக்ஸ் 74 ரன்களையும் சேர்த்தனர்.

  இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் - ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

  Also Read : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இணைகிறார் வாஷிங்டன் சுந்தர்

  அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் 93 ரன்களில் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் அய்யர் 113 ரன்களை குவித்து, ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், 45.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து, இந்திய அணி இலக்கை எட்டியது. இதையடுத்து, தொடரை கைப்பற்றுவது யார் என முடிவு செய்யும், கடைசி ஒருநாள் போட்டி நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.

  இஷான் கிஷன் சத்தை தவறவிட்டது குறித்து போட்டியின் முடிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்னால் சிக்சர்களை எளிதாக அடிக்க முடியும். எனவே சிங்கள்கள் மீது கவனம் செலுத்தாமல் சிக்சர்கள் அடிப்பதே என் எண்ணமாக இருக்கும். அணி வெற்றி பெறுவதே முக்கியம். என்னால் 7 சிங்கிள்கள் எடுத்து சத்தை எடுத்திருக்க முடியும். ஆனால் நான் அணிக்காக விளையாடாமல் எனக்காக விளையாடி இருந்தால், நான் ரசிகர்களை சிறுமைபடுத்துவதாக இருக்கும்” என கூறினார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Cricket, India vs South Africa, Indian cricket team