பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத், கேட்சை பிடிக்காமல் கோட்டை விட்ட பிறகு, டி.ஆர்.எஸ் ரிவியூவ் கேட்டு காமெடி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பவர் அகமது ஷேசாத். தற்போது அவர், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 50 ஓவர் உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார்.
ராவல் பிண்டியில் நேற்று நடந்த போட்டியில் கைபெர் பக்துன்குவா அணியும், ஃபெடரெல் ஏரியாஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஃபெடரெல் ஏரியாஸ் அணி, 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனை அடுத்து களமிறங்கி பக்துன்குவா அணி, 7 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், கைபெர் பக்துன்குவா அணியின் பேட்டிங்கின்போது 45.3 ஓவரில் குஷ்தில் ஷா தூக்கியடித்த பந்தை, டீம் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்த எதிரணி வீரர் அகமது ஷேசாத் கேட்ச் பிடிக்க முயற்சித்தார்.
ஆனால், பந்து தரையில் விழுந்த பிறகு அதை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு டி.ஆர்.எஸ் ரிவியூவ் கேட்டார். பின்னர் ரீப்ளேயில் கேட்ச் பிடிக்கவில்லை என தெளிவாக தெரிந்தது.
உடனே, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவரை கலாய்க்கும் விதமாக குரல் எழுப்பினர். இவர், 2015-ல் இலங்கை அணிக்கு எதிராகவும் இதேபோல் கேட்ச் பிடிக்காமலே அவுட் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காத்திருந்த மும்பை பாட்டி... நேரில் சென்று பார்த்த தல தோனி... வைரலாகும் புகைப்படங்கள்!
தோல்வியின்றி வரலாறா... மோதி எழுவோம்... ஹர்பஜன் சிங் ஆவேசம்!
VIDEO: தோனிக்கே மான்கட் அவுட்டா? பல்பு வாங்கிய பாண்டியா!
Also Watch...
இரட்டைப் பதவி ஆதாயம்: சவுரவ் கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ்!
தொடக்கவீரர்கள் சொதப்பல்! மும்பையிடம் வீழ்ந்தது சென்னை..
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.