ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஷோயப் அக்தரின் பழம்பெருமையும் தற்பெருமையும்- ஒருமுறை சச்சினை யார்க்கரில் வீழ்த்தி விட்டு இன்னமும் பேசுகிறார்

ஷோயப் அக்தரின் பழம்பெருமையும் தற்பெருமையும்- ஒருமுறை சச்சினை யார்க்கரில் வீழ்த்தி விட்டு இன்னமும் பேசுகிறார்

அக்தர்- சச்சின்

அக்தர்- சச்சின்

1999-ம் ஆண்டு கொல்கத்தாவில் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கரை அடுத்தடுத்து இரண்டு டெட்லி யார்க்கரில் வீழ்த்தினார் ஷோயப் அக்தர். சச்சின் கோல்டன் டக் அவுட். இது அன்று பெரிதாகப் பேசப்பட்டது, கொல்கத்தாவில் அன்று இருந்த 50,000 பேர் சச்சின் ஆட்டமிழந்தவுடன் அப்படியே சைலண்ட் ஆயினர். 2வது இன்னிங்சில் சச்சின் ரன் அவுட்டில் பெரிய சர்ச்சை வெடித்து ரசிகர்கள் மைதானத்தில் இறங்கி கலாட்டா செய்தனர். மறுநாள் ஆட்டம் காலி ஸ்டேடியத்தில் நடந்தது. பாகிஸ்தான் அந்த டெஸ்ட்டில் வென்றது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  1999-ம் ஆண்டு கொல்கத்தாவில் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கரை அடுத்தடுத்து இரண்டு டெட்லி யார்க்கரில் வீழ்த்தினார் ஷோயப் அக்தர். சச்சின் கோல்டன் டக் அவுட். இது அன்று பெரிதாகப் பேசப்பட்டது, கொல்கத்தாவில் அன்று இருந்த 50,000 பேர் சச்சின் ஆட்டமிழந்தவுடன் அப்படியே சைலண்ட் ஆயினர். 2வது இன்னிங்சில் சச்சின் ரன் அவுட்டில் பெரிய சர்ச்சை வெடித்து ரசிகர்கள் மைதானத்தில் இறங்கி கலாட்டா செய்தனர். மறுநாள் ஆட்டம் காலி ஸ்டேடியத்தில் நடந்தது. பாகிஸ்தான் அந்த டெஸ்ட்டில் வென்றது.

  சச்சின் ஒருநாளும் தான் அடித்த பவுலர்கள் பற்றி இப்படியெல்லாம் பேசியதில்லை. ஏன் கிளென் மெக்ரா கூட சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தியதைப் பற்றியெல்லாம் பெருமை பீற்றிக்கொண்டதில்லை. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் கூட இப்படியெல்லாம் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. ஆனால் இந்த அக்தருக்கு தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்ற அடையாள நெருக்கடி ஏற்பட தினப்படி ஏதாவது இந்திய வீரர்களைப் பற்றி கருத்துக் கூறி கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறார்.

  சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 18 போட்டிகளில் 1057 ரன்களை 42.28 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 69 போட்டிகளில் 2526 ரன்களை 40.09 என்ற சராசரியில் 88 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள், 16 அரைசதங்கள். டெஸ்ட்டில் 2 சதம் 7 அரைசதங்கள் என்று வெளுத்துக் கட்டியுள்ளார். டெஸ்ட்டில் அதிகபட்ச ஸ்கோர் 194, ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்கோர் 141.

  இந்நிலையில் அந்த கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் சச்சின் கோல்டன் டக் அடித்தார், அக்தர் வீசிய யார்க்கரில் பவுல்டு. அது குறித்து அப்போது நடந்த ஒரு உரையாடலை ஷோயப் அக்தர் இப்போது கூறி பெருமை பீற்றிக் கொண்டுள்ளார். இது நடந்தது 1999, அதன் பிறகு வெளுத்துக் கட்டியுள்ளார், அதற்கு முன்பும் போட்டு சாத்தியுள்ளார்.

  இது குறித்து அக்தர் கூறுவதாவது:

  நான் அப்போது கேட்டேன் ‘யார் இந்தக் கிரிக்கெட்டின் கடவுள்?’ என்று சக்லைன் முஷ்டாக்கிடம் கேட்டேன். நான் அவரை வீழ்த்தி விட்டால்? என்றேன். அதற்கு சக்லைன் தான் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் சச்சினை வீழ்த்தியிருப்பதாக கூறினார்.இந்தியா முழுதும் சச்சின் மீது அனைவருக்கும் அவ்வளவு நேயம். எனவே நானா, சக்லைனா யார் சச்சினை வீழ்த்துவது என்று வாதம் புரிந்து கொண்டிருந்தேன்.

  ராகுல் திராவிட் அவுட் ஆகிச் செல்கிறார், சச்சின் இறங்குகிறார். சப்தம் மைதானத்தில் எகிறியது. இப்படி ஒரு சப்தத்தை நான் அதுவரை கேட்டதில்லை. ஒரு லட்சம் பேர் சச்சின் மீது இப்படி ஒரு ஆவலுடன் ஆரவாரம் செய்யும் போது ஷோயப் அக்தர் வாங்கப்போகிறார் என்றே பலரும் நினைத்திருக்கக் கூடும்.

  சக்லைன் என்னிடம் வந்தார், இதுதான் உன் நேரம், அவர் ரன்களை குவிக்க அனுமதிக்கப் போகிறாயா என்றார். நான் இல்லை என்றேன்.

  அவர் மெதுவாக கிரீசுக்கு வந்தார், நான் என் பவுலிங் மார்க்குக்கு வந்து திரும்பிய போதும் அவர் மெதுவாகத்தான் கிரீசில் செட்டில் ஆனார். அக்ரம் என்னிடம் ஷோயப் லைனை மிஸ் செய்யாதே என்றார். உன்னுடைய ரிவர்ஸ் ஸ்விங் ஸ்டம்பில் இருக்கட்டும் என்றார் ரசிகர்கள் சத்தத்தில் ஒன்றும் காதில் விழவில்லை, அக்ரம் உடனே சைகை செய்தார், நான் சொன்னேன் சைகை செய்யாதே அவர் புரிந்து கொண்டு விடுவார் என்றேன்.

  கடைசியில் சச்சின் ரெடியானார், நான் அவர் மேல் முழு கவனமும் வைத்து பவுலிங் செய்தேன். பந்து விழுந்தது சச்சின் மட்டையை உயர்த்தினார், கான், பவுல்டு. அல்லாவுக்குப் பிறகு சச்சின் தான் என்னை அதுமுதல் ஸ்டார் ஆக்கினார். ஒட்டுமொத்த ரசிகர்களும் அமைதியாயினர், எங்கள் கொண்டாட்டம் மட்டும்தான் சப்தம் கேட்டிருக்கும், இப்போது கூட நீங்கள் அதை வீடியோவில் பார்க்கலாம்” என்றார் ஷோயப் அக்தர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs Pakistan, Sachin tendulkar