ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இளம் வயதில் 327 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்

இளம் வயதில் 327 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்

இளம் வயதில் முச்சதம் விளாசி சாதித்த பாக். வீரர். ஹுரைரா.

இளம் வயதில் முச்சதம் விளாசி சாதித்த பாக். வீரர். ஹுரைரா.

பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக் பிரியர்லி, ஆஸ்திரேலியா கேப்டன் மார்க் டெய்லர், இந்தியாவின் விரேந்திர சேவாக் ஆகியோர் முச்சதம் விளாசியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக்கின் நெருங்கிய உறவினரான இளம் வீரர் முகமது ஹுரைரா முச்சதம் விளாசிய 2-வது பாகிஸ்தான் இளம் வீரர் ஆவார். 327 பந்துகளில் அதிரடியாக இந்த முச்சதத்தை எடுத்துள்ளார் முகமது ஹுரைரா.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குவைதே ஆசாம் கோப்பைக்கான முதல் தர கிரிக்கெட் தொடரில் முச்சதம் விளாசினார் முகமது ஹுரைரா. இவருக்கு வயது 19 ஆகும். ஏப்ரல் 1975-ம் ஆண்டில் கராச்சியில் ஜாவேத் மியாண்டட் 311 ரன்கள் விளாசினார், அவர்தான் இளம் வயதில் முச்சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர். அப்போது மியாண்டடுக்கு வயது 17.

தனது அறிமுக முதல் தர சீசனில் ஆடும் முகமது ஹுரைரா தனது 19 வயது 239 நாட்களில் முச்சதம் விளாசி சாதனை புரிந்தார். மொத்தமாக ஹுரைரா முச்சதம் அடித்த 8வது இளம் வீரர் ஆவார்.

இதையும் படிங்க: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுப்பவரா யாசீர் ஷா?- 14 வயது சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டு

மொத்தம் பாகிஸ்தான் மண்ணில் 23 முச்சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஹுரைரா 300 அடிக்கும் 22 வது நபர் ஆவார். பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக் பிரியர்லி, ஆஸ்திரேலியா கேப்டன் மார்க் டெய்லர், இந்தியாவின் விரேந்திர சேவாக் ஆகியோர் முச்சதம் விளாசியுள்ளனர்.

இந்த இன்னிங்சில் 311 ரன்களை 340 பந்துகளில் எடுத்த ஹுரைரா அதில் 40 பவுண்டரி 4 சிக்சர்களை விளாசினார். நாதர்ன் அணிக்கு ஆடும் ஹுரைரா 3ம் நாள் தேநீர் இடைவேளையின் போது இறங்கி அடித்து நொறுக்கி 327 பந்துகளில் முச்சதம் கண்டார். இந்த சீசனில் மட்டும் 3 சதங்களை அடித்துள்ளார். இப்போது பாகிஸ்தான் அணியில் ஆடும் ஹைதர் அலியின் யு-19 சக வீரர் ஹுரைரா என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Pakistan cricket, Pakistan Cricketer