சோகிப் மாலிக், சானியா மிர்சாவுடன் இரவு பார்டி: பாக். வீரர்களை திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!

India vs Pakistan | சானியா மிர்சாவுடன் பார்டிக்கு வந்த சோகிப் மாலிக் ஹூக்கா(hookah) புகைத்ததை பார்த்தாக ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: June 17, 2019, 9:48 PM IST
சோகிப் மாலிக், சானியா மிர்சாவுடன் இரவு பார்டி: பாக். வீரர்களை திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!
வைரலாகும் புகைப்படம்
Web Desk | news18
Updated: June 17, 2019, 9:48 PM IST
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் மோசமான தோல்வியடைந்துள்ள நிலையில், போட்டிக்கு முன் சோகிப் மாலிக், சானியா மிர்சாவுடன் பாகிஸ்தான் வீரர்கள் இரவு நேர பார்டிக்கு சென்ற வீடியோவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது, மோசமான ஃபீல்டிங், பேட்டிங்கில் ஏமாற்றம் என பாகிஸ்தான் அனைத்திலும் சொதப்பியது.

பாகிஸ்தான் அணியின் பொறுப்பற்ற விளையாட்டே தோல்விக்குக் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி உடனான போட்டிக்கு முன் சோகிப் மாலிக், சானியா மிர்சா உடன் இணைந்து பாகிஸ்தான் வீரர்கள் வாகப் ரியஷ், இமாம்-உல்-ஹக் ஆகியோர் இரவு பார்டிக்கு சென்றதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மான்செஸ்டரில் உள்ள பிரபல விடுதியில் பாகிஸ்தான் வீரர்களை பார்த்ததாக அந்தநாட்டு ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். சானியா மிர்சாவுடன் பார்டிக்கு வந்த சோகிப் மாலிக் ஹூக்கா(Hookah) புகைத்ததை பார்த்தாக ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பீட்சா, பர்கர் போன்ற உணவை எடுத்துகொண்டாக கூறினார்.

இந்தப் பார்டி இரவு 2 மணி வரை நடந்தாக ரசிகர்கள் பலர் இணயைத்தில் பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பார்டியில் கலந்து கொண்டது வெட்கடப்பட வேண்டிய செயல் என்று கடுமையாக சாடியுள்ளார்.இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சோகிப் மாலிக் டக் அவுட்டாகினார். இதனால் இணையத்தில் அவரை பலர் விமர்சித்து வருகின்றனர். சோகிப் மாலிக் மீதும் அவர் உடன் பார்டிக்கு சென்ற சக பாகிஸ்தான் வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று ரசிகர்கள் இணையத்தில் போர்கொடி தூக்கியுள்ளனர்.First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...