பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சோகிப் மாலிக் நடப்பு உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு ஃபேர்வெல் டின்னார் கொடுத்து விடைகொடுக்கலாம் என வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடருடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக ஓராண்டுக்கு முன்னரே பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் சோகிப் மாலிக் அறிவித்திருந்தார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் சோகிப் மாலிக் அணியில் இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “சோகிப் மாலிக் உலகக் கோப்பை முன்னாதாகவே ஓய்வை அறிவித்து இருந்தார். கடைசியாக நடந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.
உலகக் கோப்பையில் அவர் அதிக போட்டியில் விளையாடவில்லை. 2 போட்டிகளில் டக் அவுட்டாகி உள்ளார். எந்த ஒரு வீரருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படும். சோகிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. பல போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். அவருக்கு சிறந்த பிரிவு உபச்சாரம் அளித்து பெருமைப்படுத்த வேண்டும் என்றார்.
சோகிப் மாலிக்கிற்கு ஃபேர்வெல் மேட்ச் வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு “இது கிளப் மேட்ச் கிடையாது. வீரர்க்கு வாய்ப்பளித்து அவருக்கு விடைகொடுக்க, வேண்டுமானால் அவருக்கு சிறந்த ஃபேர்வெல் டின்னர் கொடுத்து விடைகொடுக்கலாம்“ என வாசிம் அக்ரம் பதிலளித்தார்.
37 வயதான சோகிப் மாலிக் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இரண்டு போட்டிகளில் டக்-அவுட்டாகி உள்ளார். மேலும் இந்தியாவுடனான போட்டிக்கு முன் மாலிக் இரவு டின்னரில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி கடும் விமர்சனத்திற்கு சோகிப் மாலிக் உள்ளனார்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.