Home /News /sports /

எடையை குறைத்தால் கோடிகளில் பணம்.. ரிஷப் பந்துக்கு அக்தர் சொன்ன யோசனை!

எடையை குறைத்தால் கோடிகளில் பணம்.. ரிஷப் பந்துக்கு அக்தர் சொன்ன யோசனை!

ஷோயப் அக்தர் மற்றும் ரிஷப் பண்ட்.

ஷோயப் அக்தர் மற்றும் ரிஷப் பண்ட்.

தொடர்ந்து இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்தும் இந்திய வீரர்கள் குறித்தும் ஷோயப் அக்தர் யூடியுபில் பேசி வருகிறார்.

  • Last Updated :
    சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து உடனான ஒருநாள் தொடரில், ரிஷப் பந்த் இறுதிப் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களை எடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து ரிஷப் பந்தை பல முன்னால் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.

    இதைக்குறித்து தனது யூட்டியூப் சேனலில் பேசிய ஷோயப் அக்தர், “ரிஷப் பந்த் ஒரு தைரியமான வீரர். அவர் கட் சாட், புல் சாட், ஸ்வீப், ரிவஸ் ஸ்வீப் என அனைத்து சாட்களையும் நன்றாக விளையாடுகிறார். இதற்கு முன் அவர் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று கொடுத்தார். தற்போது இங்கிலாந்தில் தொடரை வென்று கொடுத்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

    மேலும் அவர், “பந்த் சிறிது எடையைக் குறைத்தால் அவர் ஒரு மாடல் ஆகலாம். தற்போது அவர் கொஞ்சம் எடை அதிகமாக உள்ளார். இந்திய மார்கெட் என்பது மிக பெரியது. அவர் அழகாகவும் உள்ளார். அவர் எடையைக் குறைப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால், அவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்” என கூறினார்.

    மேலும் “இந்தியாவில் ஒருவர் பெரிய மாடலாக ஆனால், அவர் மீது நிறைய முதலீடுகள் வந்து குவியும். அதனால் பந்த் அதிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

    இங்கிலாந்து உடனான தொடரில் இந்தியா ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்றது. மற்றும் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தது. தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Cricket, Rishabh pant

    அடுத்த செய்தி