பத்தாண்டின் ஐசிசி அணியா அல்லது ஐபிஎல் அணியா?- பாக். வீரர்கள் என்ன பாவம் செய்தார்கள்?- ஷோயப் அக்தர் ஆவேசம்
டி20 தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தில் இருக்கிறார், ஆனால் அவர் ஐசிசி பத்தாண்டின் சிறந்த அணியில் இல்லை, இது என்ன கொடுமை என்கிறார் ஷோயப் அக்தர்.

ஷோயப் அக்தர்.
- News18 Tamil
- Last Updated: December 29, 2020, 4:10 PM IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அமைப்பு ஆனது தசாப்தங்களுக்கான (10 ஆண்டுகளுக்கான) இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியை வெளியிட்டது. அதில் ஆடவர் மற்றும் மகளிர் என அனைத்து 3 நிலைகளிலான போட்டிகள் எதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை.
டி20 தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தில் இருக்கிறார், ஆனால் அவர் ஐசிசி பத்தாண்டின் சிறந்த அணியில் இல்லை, இது என்ன கொடுமை என்கிறார் ஷோயப் அக்தர்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர், இது என்ன உலக அணியா அல்லது ஐபிஎல் அணியா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தன் யூடியூப் சேனனில், “ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இல்லை, ஐசிசியில் பாகிஸ்தானும்தானே உறுப்பு வகிக்கிறது. இது என்ன ஐசிசி உலக அணியா அல்லது ஐபிஎல் அணியா, இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பாபர் ஆஸம் டி20 கிரிக்கெட்டின் நமப்ர் 1 வீரர் அவர் பெயர் தேர்வு செய்யப்படவில்லை.
ஐசிசிக்குத் தேவைப் பணம், டிவி ஒளிபரப்பு உரிமைகள், விளம்பர உரிமைகள், என்று பணம் சம்பாதிப்பதுதான் குறிக்கோள். அதனால்தான் 2 புதியப் பந்துகளையும் 3 பவர் ப்ளேக்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்துகின்றனர்.டெனிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் எங்கே? உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் எங்கு போனார்கள்?வெஸ்ட் இண்டீஸின் 5 பெரிய பவுலர்கள் எங்கே? ஐசிசி கிரிக்கெட்டை வைத்து பணம் சம்பாதிக்கிறது, 10 தனியார் லீகுகளை அனுமதித்துள்ளது.
சச்சின் ஷோயப் அக்தரை எதிர்கொள்கிறார் போன்ற சுவாரசியமான கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் போட்டிகள், சவால்கள் இப்போது இல்லை. பாபர் ஆஸம் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுபவர் அவரே இல்லை., இது என்ன ஐசிசி அணியா ஐபிஎல் அணியா?” இவ்வாறு ஷோயப் அக்தர் ஆத்திரமாக பேசியுள்ளார்.
டி20 தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தில் இருக்கிறார், ஆனால் அவர் ஐசிசி பத்தாண்டின் சிறந்த அணியில் இல்லை, இது என்ன கொடுமை என்கிறார் ஷோயப் அக்தர்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர், இது என்ன உலக அணியா அல்லது ஐபிஎல் அணியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.