• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • மேத்யூ ஹெய்டனை நான் கதறவிட்டிருக்கிறேன்.. அவர் அழுதே விட்டார்: ஷோயப் அக்தர்

மேத்யூ ஹெய்டனை நான் கதறவிட்டிருக்கிறேன்.. அவர் அழுதே விட்டார்: ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

பாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை டி20 தொடருக்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் தன் பந்து வீச்சில் ஹெய்டனை கதறடித்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார் ஷோயப் அக்தர்.

 • Share this:
  பாகிஸ்தான் பேட்டிங் கோச்சாக ஹெய்டனும், பவுலிங் கோச் ஆக வெர்னன் பிலாண்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர், ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மாற்றம் முன்னேற்றம் நோக்கி பாகிஸ்தான் செல்லவிருக்கும் தருணத்தில் பாபர் அசாம் என்னடாவென்றால் அணித்தேர்வில் அதிருப்தி தெரிவிக்கிறார், அக்தர் என்னவென்றால் ஹெய்டன் தன் பந்து வீச்சில் ஆட முடியாமல் அழுததை நினைவுகூர்கிறார், என்னதான் நடக்கிறத் பாகிஸ்தான் கிரிக்கெட்டில்?

  அவர் காலத்தில் முழு உடற்தகுதியுடன் அக்தர் வீசினால் மண்டையும் பாதமும் பத்திரம் என்றுதான் எதிரணி வீரர்கள் ஆட வேண்டியிருக்கும். அதனால்தான் அவர் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ், 2004-05-ல் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடச் சென்ற போது ஹெய்டனை அக்தர் பாடாய்ப்படுத்தினார், ஆனால் அதை நினைவுகூரும் அக்தர் அந்தத் தொடரில் 0-3 என்று பாகிஸ்தான் ஆஸ்திரே
  ஆஸ்திரேலியாவிடம் உதை வாங்கியதை சவுகரியமாக மறந்து விட்டார்.

  இந்நிலையில் பிடிவி ஸ்போர்ட்ஸுக்கு அக்தர் அளித்த நேர்காணலில் கூறியதாவது: “நான் ஒரு போதும் ஹெய்டனின் உருவத்தை ரசித்ததில்லை, அவர் ஒருநாளும் என் புகழை ரசித்ததில்லை. நான் அவரிடம் ‘உன்னை விட நான் பார்க்க நன்றாக இருக்கிறேன்’ என்று கூறி வெறுப்பேற்றுவேன். பெர்த்தில் முதல் டெஸ்ட் போட்டி ஹெய்டன் என் பந்தில் எல்.பி.ஆனார், நான் அவருக்கு கொடுத்த செண்ட்-ஆஃபுக்காக 10% சம்பளத்தில் அபராதம் கட்டினேன்.

  அந்தத் தொடரில் ஹெய்டனை வெகுவிரைவில் 3 முறை பெவிலியன் அனுப்பினேன். நான் ரவுண்ட் த விக்கெட்டில் வீசும் போது என் பந்தை அவர் லீவ் செய்யத் தொடங்கினார். நான் பந்தை பெரிய அளவில் உள்ளே ஸ்விங் செய்து கொண்டிருந்தேன். அவர் பவுல்டு ஆனார். மெல்போர்னிலும் அவரை மீண்டும் வீழ்த்தினேன். சிட்னியில் திண்டாடினார், அவரால் பேட்டிங்கை சரளமாக ஆட முடியவில்லை. அவரால் 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரை அழ அடித்தேன், அவரும் அழுதே விட்டார்.  பிறகு இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்காக இருவரும் சந்தித்தோம். நானும் அவரும் விலகியே இருந்தோம், ஏனெனில் கடந்த காலத்தில் நிறைய மோதிக்கொண்டுள்ளோம். ஒரு நாள் என்னுடன் டின்னர் சாப்பிடுமாறு அழைத்தேன். டின்னர் சாப்பிட்டு முடித்து அவரை ட்ராப் செய்யச் சென்றேன், ஆனால் அவர் அறை சாவியை டின்னர் சாப்பிட்ட ஹோட்டலிலேயே விட்டு விட்டார், மீண்டும் இருவரும் போய் சாவியை எடுத்து வந்து மீண்டும் அவரை ட்ராப் செய்தேன். நான் அப்போது அவரிடம் சொன்னேன் இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆன இடத்தில் நீங்கள் தங்கியிருக்கலாமே என்றேன். நான் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறேன் என்றேன். அவர் கடுப்பாகி என்ன எழவு பேசுகிறாய் என்றார்.

  பிறகு ஒருநாள் அவரிடமிருந்து மெசேஜ் வந்தது. “என் வாழ்நாள் முழுதும் நான் பயந்த ஒரு நபர் மிகவும் நல்ல மனிதர், நான் இழந்த நல்ல மனிதர்” என்று என்னைப் பற்றி குறிப்பிட்டிருந்தார், அவர் பாகிஸ்தான் அணிக்கு கோச் ஆக வந்திருப்பது நல்லது, நாங்கள் இருந்த அப்போதைய மன அமைப்பை இப்போதுள்ள வீரர்களிடம் கொண்டு வர ஹெய்டன் உதவுவார்” என்றார் ஷோயப் அக்தர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: