Home /News /sports /

எங்களுக்கெல்லாம் தோனியை மிகவும் பிடிக்கும் அவர் மேல் பெரிய மரியாதை உள்ளது - ஷோயப் அக்தர்

எங்களுக்கெல்லாம் தோனியை மிகவும் பிடிக்கும் அவர் மேல் பெரிய மரியாதை உள்ளது - ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், தோனியை பாகிஸ்தான் வீரர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், தோனியை பாகிஸ்தான் வீரர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    MS தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திக்காலத்தை அடைந்துவிட்டார், ஆனால் அவர் இன்னும் சிஎஸ்கேவின் காவலனாக இருப்பதோடு ஐபிஎல் வர்த்தகத்தின் வணிகத்தின் முகமாகவும் இருக்கிறார். ஜடேஜாவிடம் தேவையில்லாமல் கேப்டன்சியை ஒப்படைத்து விட்டு தேவையில்லாமல் அவரது போதாமையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டு, சிஎஸ்கே-ன்னா அது தானேதான் என்று பலரும் பேசும்படியாக கேப்டன்சியை மீண்டும் பெற்றார். இதனால் ஜடேஜாவின் ஃபார்மும் அவுட் ஆகி விட்டது. இன்று காயம் என்று உட்கார்ந்திருக்கிறார் ஜடேஜா.

    தோனி இன்னும் சென்னை அணிக்கு மதிப்புமிக்க சொத்தாக நிரூபித்து வருகிறார், ஆனால் அவரது எதிர்காலம் பற்றிய கேள்வி பெரியதாக உள்ளது, அவர் தனது கேப்டன்சியை அடுத்த சீசனுக்கும் தொடர்வாரா எந்நாளும் தோனி தோனி என்று கோஷமிடும் அவரின் பக்தர்களுக்கு தொடர்ந்து தரிசனம் அளிப்பாரா என்ற கேள்வியும் இருக்கிறது.

    ஆனால் ஷோயப் அக்தர், இன்னொரு சீசனுக்கும் தோனி ஆடுவார் என்கிறார் அக்தர். “அவர் எம்.எஸ்.தோனி, என்ன செய்வார் என்று கணிப்பது கடினம். அப்படி எதிர்பாராததை செய்யகூடியவராகவே அவர் அறியப்பட்டுள்ளார். ஆனால் மகா மனிதர், அவரை நாங்கள் நேசிக்கிறோம் அவர் மீது மட்டற்ற மரியாதை இருக்கிறது. ஓய்வு பெறுவதற்கு முன்பாக இன்னொரு சீசன் ஆடுவார் என்றே கருதுகிறேன்.

    பிறகு நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவும் அவர் இருப்பார். ஐபிஎல் தொடக்கத்திலேயே சென்னை இந்தத் தொடரில் தொடர் தோல்விகளால் வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் நன்றாக ஆடினார்கள். ஆனால் இந்த முறை சிஎஸ்கே ரீகுரூப் செய்து கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அடுத்த சீசனில் தெளிவான மனநிலையுடன் தெளிந்த சிந்தனையுடனும் வருவார்கள்.

    களத்துக்கு வெளியே நீங்கள் போட்டிகளை வெல்லலாம், ஓய்வறையில் வெல்வதாக பேசிக்கொள்ளலாம், ஆனால் களத்தில் நன்றாக ஆடினால் மட்டுமே முடிவுகள் சாதகமாக இருக்கும்” என்றார் ஷோயப் அக்தர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dhoni, IPL 2022

    அடுத்த செய்தி