சச்சினுக்கு அன்று ஏதாவது ஆகியிருந்தால் என்னை உயிரோடு எரித்திருப்பார்கள்: ஷோயப் அக்தர் பரபரப்பு

ஷோயப் அக்தர்

அன்றைக்கு நான் செய்த காரியத்தினால் சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் என்னை உயிரோடி எரித்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர் பதைபதைப்புடன் ஒரு சம்பவத்தை விவரித்தார்.

 • Share this:
  2007-ல் கடைசியாக பாகிஸ்தானுடன் இருதரப்பு டெஸ்ட் தொடர் நடந்த போது இந்திய அணி வீரர்களுடன் நட்பார்ந்த முறையில் ஷோயப் அக்தர் ஒரு காரியத்தை சச்சினுக்குச் செய்யப் போக விளையாட்டு விபரீதமாகியிருந்தால் தன்னை உயிரோடு எரித்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்தார்.

  அரசியல் ரீதியாக இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் இருந்தாலும் நட்புறவில் பாகிஸ்தான், இந்திய வீரர்கள் இடையே நினைவு கூரத்தக்க இனிய நாட்கள் உள்ளன என்பதை இரு நாட்டு வீரர்களுமே ஒப்புக் கொண்டுள்ளனர். ஷோயப் அக்தர் அதில் ஒருவர்.
  இந்நிலையில் விளையாட்டு சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஷோயப் அக்தர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நடந்த சம்பவம் ஒன்றை பதைபதைப்புடன் விவரித்தார்.

  கடைசியாக இருதரப்பு தொடருக்காக பாகிஸ்தான் 2007-ல் டெஸ்ட் தொடரில் ஆடியது, அப்போது இந்தியா வந்த போது இரு அணி வீரர்களும் விருது நிகழ்ச்சிக்காக கூடியிருந்தனர். அப்போது சச்சின் டெண்டுல்கருடன் ஜாலியாக கேளிக்கை செய்ய விரும்பினார் ஷோயப் அக்தர்.

  சச்சின் டெண்டுல்கர் சென்னையில் 4வது இன்னிங்சில் அபார சதம் எடுக்க இந்திய அணி சேசிங்கில் வெற்றி பெற்றதை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.


  சச்சின் டெண்டுல்கரை அலேக்காக ஷோயப் அக்தர் தூக்க முற்பட சச்சின் நழுவி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து பயந்து நடுங்கி விட்டார் ஷோயப் அக்தர். சச்சினுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால் ஏதாவது எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தால் தனக்கு இனி இந்திய விசாவே கிடைக்காது, ரசிகர்கள் தன்னை எரித்தே கொன்றிருப்பார்கள் என்று ஷோயப் அக்தர் பதைபதைப்புடன் விவரித்தார்.

  “நான் சச்சினை தூக்கினேன், ஆனால் அவர் என் கைகளில் இருந்து நழுவி கீழே விழுந்தார். நான் பயந்து நடுங்கி விட்டேன், சச்சின் டெண்டுல்கருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால் எனக்கு இந்திய விசா கிடைக்காது. இந்தியர்கள் என்னை இந்தியாபக்கம் வரவிடமாட்டார்கள். என்னை உயிருடன் எரித்திருப்பார்கள்.” என்றார் அக்தர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பாகிஸ்தானுக்கு பிறகு தன்னை அதிகம் நேசிக்கும் நாடு இந்தியாதான் என்று அந்தப் பேட்டியில் கூறினார் ஷோயப் அக்தர்.
  Published by:Muthukumar
  First published: