முகப்பு /செய்தி /விளையாட்டு / சட்டை போடாமல் நானும் சல்மான் கானும் சுற்றினோமா?- ஷோயப் அக்தர் ருசிகரம்

சட்டை போடாமல் நானும் சல்மான் கானும் சுற்றினோமா?- ஷோயப் அக்தர் ருசிகரம்

சல்மான் கான், ஷோயப் அக்தர்

சல்மான் கான், ஷோயப் அக்தர்

இந்தியாவுக்கு முன்பெல்லாம் அடிக்கடி வந்து போகும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் இங்கு பாலிவுட் பிரபலங்களுக்கு நெருங்கிய தோஸ்த் என்பது பலரும் அறிந்ததே.

  • Last Updated :

இந்தியாவுக்கு முன்பெல்லாம் அடிக்கடி வந்து போகும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் இங்கு பாலிவுட் பிரபலங்களுக்கு நெருங்கிய தோஸ்த் என்பது பலரும் அறிந்ததே.

சல்மான் கான், ஷாரூக் கான் உள்ளிட்ட பல நண்பர்கள் நண்பிகள் ஷோயப் அக்தருக்கு பாலிவுட்டில் உண்டு.

இதில் சல்மான் கானும் இவரும் மும்பை தெருக்களில் சட்டை இல்லாமல் திரிவார்கள் என்று நீண்ட நாளைய செய்தி உண்டு. இதனை வெறும் வதந்திதான் என்று மறுத்த ஷோயப் அக்தர், சல்மான் வீட்டில் தன்னை விருந்துக்கு அழைத்த போது இருவரும் சட்டையை மாற்றி கொண்டோம் இதுதான் நடந்தது என்றார்.

“சல்மான் கான் வீட்டில் நான், கத்ரீனா கைப், இருந்தோம். போவதற்கு முன்பு தன்னுடன் உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று கூறினார் சல்மான். சல்மான் கான் எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்பவரல்ல, சுற்றி நடக்கும் அனைத்தையும் பார்ப்பவர்.

Also Read: என்னை இளைய சகோதரன் போல் சல்மானும் ஷாரூக்கானும் பார்த்துக் கொண்டனர்: ஷோயப் அக்தர் நெகிழ்ச்சி

உங்கள் கையில் வாட்ச் இல்லை என்றால் வாட்சைக் கழற்றி உங்களுக்குக் கொடுத்து விடுவார். உங்கள் சட்டை அழுக்காக இருந்தால் சட்டையைக் கழற்றி கொடுப்பார், அல்லது புதிய சட்டைக் கொடுப்பார். அன்றும் அப்படித்தான் எனக்கு ஒரு சட்டைக் கொடுத்தார். எங்கள் இருவருக்கும் ஒரே அளவு ஷர்ட்தான். பிறகு வீட்டில் உணவு அருந்தி விட்டு நான் லாகூர் திரும்பி விட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் மறுநாள் காலை செய்தியைப் பார்த்தால் ‘பாந்த்ராவில் ஷோயப் அக்தரும், சல்மான் கானும் சட்டை இல்லாமல் சுற்றினர்’ என்று தலைப்புடன் செய்தி வெளியிட்டார்கள்.

top videos

    இந்தச் செய்தியைப் பார்த்து விட்டு ஷாரூக்கானே என்னை அழைத்து இப்படி நடந்ததா என்றார். நான் நடந்ததைக் கூறினேன், எனவே இது போலிச்செய்தி என்று மறுத்தார் ஷோயப் அக்தர்.

    First published:

    Tags: Bollywood, Cricket, Salman khan