சூதாட்டக்காரர்களால் சூழப்பட்டிருந்தேன்! அணி வீரர்கள் குறித்து மனம் திறந்த சோயப் அக்தர்

சோயப் அக்தர்

மிகவும் திறமையான இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களது வாழ்க்கையை வீணடித்துள்ளனர். சிறிய பணத்துக்காக அவர்கள் அவர்களை விற்றுள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாகிஸ்தான் அணிக்காக விளையாடும்போது என்னைச் சுற்றி சூதாட்டக்காரர்களாக இருந்தார்கள் என்று அந்நாட்டு அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த சோயப் அக்தர் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

  2010-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று புகார் எழுந்தது. அந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு, கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிஃப், முகமது அமீர் ஆகியோருக்கு ஐ.சி.சி தடைவிதித்தது. இந்தநிலையில், ’ரீவைண்ட் வித் சமீனா பீர்சாடா’ என்ற நிகழ்ச்சியில் அப்போதைய வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கலந்துகொண்டு பேசியிருந்தார்.

  அப்போது அவர், ‘பாகிஸ்தான் எப்போதும் ஏமாற்றக் கூடாது என்று என்று நம்பியிருந்தேன். நான், சூதாட்டக்காரர்களால் சூழப்பட்டிருந்தேன். நான், 22 பேருக்கு எதிராக விளையாடினேன். 11 பேர் எதிரணி வீரர்கள். 10 பேர் எங்கள் அணியைச் சேர்ந்தவர்கள். யார் சூதாட்டக்காரர்கள் என்பது யாருக்குத் தெரியும். அப்போது சூதாட்டம் நடைபெற்றுள்ளது. அத்தனை போட்டிகளிலும் அவர்கள் எப்படி சூதாட்டம் செய்தனர் என்பதை முகமது ஆசிப் என்னிடம் கூறினார். அவர்களுடைய திறமையை அவர்கள் எப்படி வீணடிக்கின்றனர் என்பதை முகமது அமிர், முகமது ஆசிப் ஆகியோருக்கு விளக்க முயற்சி செய்தேன். இதுகுறித்து நான் அறிந்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

  வெறுப்பில் சுவற்றின் மீது குத்தினேன். மிகவும் திறமையான இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களது வாழ்க்கையை வீணடித்துள்ளனர். சிறிய பணத்துக்காக அவர்கள் அவர்களை விற்றுள்ளனர்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  முன்னதாக, இந்த விவகாரம் குறித்து ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த புத்தகத்தில், ‘2010-ம் ஆண்டு அணி வீரர்களுக்கும், சூதாட்டக்காரர்களுக்கு இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றம் குறித்து எனக்குத் தெரிந்தது. அதுகுறித்த ஆதாரங்களை பயிற்சியாளர் வக்கார் யூனிஸிடம் கொடுத்தபோதும் அவர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: