ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

என்ன சிம்ரன் இதெல்லாம்..! - ஒரு ஃபிளைட்டால் உலகக்கோப்பை மிஸ் செய்த ஷிம்ரன் ஹெட்மயர்

என்ன சிம்ரன் இதெல்லாம்..! - ஒரு ஃபிளைட்டால் உலகக்கோப்பை மிஸ் செய்த ஷிம்ரன் ஹெட்மயர்

ஷிம்ரன் ஹெட்மயர்

ஷிம்ரன் ஹெட்மயர்

Shimron Hetmyer : ஹெட்மயருக்கு பதிலாக ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளன. உலகக்கோப்பையில் விளையாடுவதே பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் கைக்கு வந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் ப்ளேயர் ஷிம்ரன் ஹெட்மயர். எதோ காயம் ஏற்பட்டு எல்லாம் ஹெட்மயர் விலகவில்லை. தம்பி பிளைட்டை மிஸ் செய்ததால் நீங்க உலகக்கோப்பையில் ஆட வேண்டாம் என கறாரா சொல்லிவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம்.

ஏங்க ஒரு பிளைட்ட மிஸ் செய்ததுக்கு எல்லாமா உலகக்கோப்பை டி20 ஸ்குவாடில் இருந்து தூக்குவீங்கன்னு கேட்கலாம். அக்டோபர் 1-ம் தேதி வெஸ்டீஸ் இண்டீஸ் டீம் ஆஸ்திரேலியா கிளம்பும் போது அணியினருடன் தன்னால் வரமுடியாது குடும்ப சூழல் காரணமாக அடுத்த விமானத்தில் வருகிறேன் என அணி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார் ஹெட்மயர். சரி அடுத்த பிளைட்டை பிடிச்சு வாங்கன்னு நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தான் இரண்டாவது பிளைட்டை மிஸ் செய்துவிட்டு அசடுவழிந்துள்ளார் ஹெட்மயர். இதனால் கடுப்பான அணி நிர்வாகம் இதற்கு மேலும் உங்களுக்காக காத்திருக்க முடியாது. நீங்க டிவியில டி20 மேட்ச பாருங்க நாங்க வேற ஆள பார்த்துக்கிறோம் கறார்னா சொல்லிட்டாங்க.

இதன்காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஹெட்மயருக்கு பதிலாக ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Published by:Ramprasath H
First published:

Tags: Cricket, T20 World Cup, West indies