பாலிவுட் சினிமாவில் கால்பதிக்கும் ஷிகர் தவான்
இந்திய அணிக்கு டி20 கேப்டனாக ரோஹித் சர்மா இல்லாத போது நியமிக்கப்படலாம் என்ற அளவுக்கு தனது டி20 ஆட்டத்தை தக்கவைத்துள்ள ஷிகர் தவானுக்கு சினிமாவிலும் களமிறங்கி அதிரடி காட்ட ஆசை பிறந்துள்ளதாக பாலிவுட் வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.
பாலிவுட்டில் உருவாகிவரும் படமொன்றில் ஷிகர் தவனும் இணைந்துள்ளாராம். அவர் தொடர்பான காட்சிகள் ஏற்கெனவே எடுத்தும் முடிக்கப்பட்டுவிட்டதாம். இதற்கு முன்னர் சந்தீப் பாட்டீல், சையத் கிர்மானி, கபில் தேவ் உள்ளிட்டோர் சினிமாவில் நடித்துள்ளனர், ஹர்பஜன் சிங் நடித்துள்ளார், அந்த வரிசையில் தற்போது ஷிகர் தவானும் பாலிவுட்டில் கலக்க முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் வீரர் என்பதைத் தவிர, இந்திய கிரிக்கெட் அணியின் கப்பர் ஷிகர் தவான் தனது சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்களைப் பின்தொடர்கிறார். ஷோலேயில் பிரபல வில்லன் அம்ஜத் கானின் பெயர் கப்பர் சிங், ஷிகர் தவானின் செல்லப்பெயரும் கப்பர்தான். ஷிகர் தவான் தனது சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்களால் பின்தொடரப்படுகிறார்.
இது வெறும் கெஸ்ட் ரோல் இல்லை. தவனுக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ள ரோல் படத்தில் மிக முக்கியமான ஒன்று என்கிறது பிங்கிவில்லா செய்தி.
இது தொடர்பாக விவரம் அறிந்த ஒருவர் ஊடகம் ஒன்றிற்குக் கூறும்போது, ஷிகர் எப்போதுமே நடிகர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர், அவருக்கு இந்த ரோல் வழங்கப்பட்டபோது அவர் மகிழ்ச்சியடைந்தார். ஷிகர் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார் என்று தயாரிப்பாளர்கள் உணர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அவரை அணுகினர் என்றார்.
முழு படத்திலும் ஷிகர் தவான் வருவாராம், ஆகவே இது அவருக்கு முழுநீளத் திரைப்படம் ஆகும். கடந்த ஆண்டு அக்ஷய் குமாரின் ராம்சேது படத்தின் செட்களில் ஷிகர் தவான் காணப்பட்டதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது அந்தப் படத்தில் ஷிகர் தவான் நடிக்கிறார் என்ற வதந்திகள் பரவின, ஆனால் ஷிகர் தவானும் அக்ஷய் குமாரும் தோஸ்த் என்பதால் அவரைச் சந்திக்கச் சென்றதாகக் கூறப்பட்டது.
இப்போது முழு படத்தில் ஷிகர் தவான் நடித்துள்ளார், இவர் பகுதிகளுக்கான ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது, படத்தின் தலைப்பு உள்ளிட்ட பிற விவரங்களின் ரகசியங்கள் காக்கப்பட்டு வருகின்றன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.