ரோஹித் சர்மா மகளுடன் கொஞ்சி விளையாடும் ஷிகார் தவான்! - வீடியோ

  • Share this:
ரோஹித் சர்மா மகள் சமைராவுடன் ஷிகார் தவான் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்குபவர்கள் ரோஹித் சர்மா - ஷிகார் தவான். சச்சின் - கங்குலி ஜோடிக்கு பின் சிறந்ந வலது, இடதுகை பேட்ஸ்மேன் ஜோடியாக இருப்பவர்கள் ரோஹித் - தவான்.

கிரிக்கெட் போட்டிகளை தாண்டியும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் சர்மா மகளுடன் விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரோஹித் மகள் தவானை தலையில் தட்டுகிறார். உடனே தவான் வலிப்பது போல் படுக்கையில் விழுந்து எழுகிறார். மீண்டும் அவரை தட்ட தவானும் மீண்டும் அதேப் போன்று விழுவது போல் விளையாடுகிறார். 
View this post on Instagram
 

Some masti with adorable Samaira ❤ @rohitsharma45


A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on


தவான் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். வங்கதேச அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தவான் 41 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்னாகும். இந்த போட்டியில் ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

Also Watch : டிக்டாக்கை தடை செய்தால் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து விடுமா?

Published by:Vijay R
First published: