Home /News /sports /

அபிநந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்கள்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அபிநந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்கள்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணி. (BlackCaps)

இந்திய கிரிக்கெட் அணி. (BlackCaps)

Indian Cricket Players posted heartfelt message About #Abhinandan Release | பாகிஸ்தான் வசம் இருக்கும் இந்திய விமானி அபிநந்தன் இன்று (மார்ச் 1) விடுதலை செய்யப்படுகிறார்.

  • News18
  • Last Updated :
    பாகிஸ்தானின் வசம் இருக்கும் அபிநந்தன் விடுதலையை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக போர் விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    Abhinandan, அபிநந்தன்
    இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்.


    இந்திய விமானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், “அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இன்று (மார்ச் 1) அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார்.

    இந்நிலையில், அபிநந்தன் விடுதலையை எதிர்பார்த்து காத்திருப்பதாக கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து ஷிகர் தவான் தனது ட்விட்டரில், “எங்களுடைய வீரமிகுந்த இதயத்தின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.



    இதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வினோத் காம்ப்ளி ஆகியோரும் அபிநந்தனின் வருகையால் மகிழ்ச்சி அடைவதாகவும், நீண்ட நாட்களுக்கு இரு நாட்டு அமைதிக்கு நிலைநாட்டும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.





    ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்த பள்ளிச் சிறுவன்!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Abhinandan, India vs Australia, Indian cricket team

    அடுத்த செய்தி