ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஷிகார் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்ப்பு!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஷிகார் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்ப்பு!

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஷிகார் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடர் வரும் டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரிலிருந்து காயம் காரணமாக தொடக்க வீரர் ஷிகார் தவான் விலகி உள்ளார். சூரத்தில் நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி டிராஃபியின் போது ஷிகார் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன் காயத்திலிருந்து ஷிகார் தவான் விடுப்பட மாட்டார் என்பதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றிருந்தாலும் அவர் களமிறக்கப்படவில்லை.

  டி20 போட்டிகளில் ரிஷப் பந்தின் ஆட்டம் சிறப்பாக இல்லாவிடிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளதால் மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் களமிறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Sanju Samson, Shikhar dhawan