ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கடைசி நிமிடத்தில் கேப்டன்ஷிப் மாற்றம்.. ஷிகார் தவான் ஆதங்கம்

கடைசி நிமிடத்தில் கேப்டன்ஷிப் மாற்றம்.. ஷிகார் தவான் ஆதங்கம்

ஷிகார் தவான்

ஷிகார் தவான்

Shikha Dhawan | கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ஷிகார் தவான் ஆதங்கத்துடன் பதில் கூறியுள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  இதனையடுத்து இந்திய அணி வங்கதேச நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து சுற்றுபயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர்.

  இந்த நிலையில் அடுத்தாண்டு ஜிம்பாவே நாட்டுக்கு இந்திய அணி சுற்றுபயணம் செய்யவுள்ளது. இதில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளித்துள்ளது பிசிசிஐ. இதற்கான ஒரு நாள் இந்திய அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் தற்போது ஷிகார் தவான் துணை கேப்டனாகாவும் கே.எல்.ராகுல் கேப்டனாக நியிமிக்கப்பட்டுள்ளனர்.

  இதையும் படிங்க: ரசிகரின் செல்போனை தட்டி விட்ட ரொனால்டோவிற்கு 2 போட்டிகளில் விளையாட தடை; ரசிகர்கள் அதிர்ச்சி

  இது குறித்து பேசிய ஷிகார் தவான், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டது தனக்கு வருத்தம் இல்லை என கூறியுள்ளார். ஜிம்பாவே அணிக்கு எதிரான கேப்டன்சி மாற்றத்தால் எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. இந்த உலகத்திற்கு வெறும் கையுடன் தான் வந்தோம், வெறும் கையுடன் தான் செல்லப்போகிறோம் என ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, Kl rahul, Shikhar dhawan, Zimbabwe