ஐ.பி.எல் போட்டியில் இஃப்தார் நோன்பு இருந்துகொண்டே ஹைதராபாத் வீரர்கள் ரஷித் கான் மற்றும் முகமது நபி விளையாடியதாக ஷிகர் தவான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Keemo Paul ends the tension!@DelhiCapitals win the #Eliminator by 2 wickets and move on to Qualifier 2 🔵#DCvSRH pic.twitter.com/WzpjUeg5pC
— IndianPremierLeague (@IPL) May 8, 2019
இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் இஃப்தார் நோன்பு இருந்துகொண்டே ஹைதராபாத் வீரர்கள் ரஷித் கான் மற்றும் முகமது நபி விளையாடியதாக ஷிகர் தவான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், “அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். இவர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு நாள் முழுவதும் நோன்பு இருந்துகொண்டே போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதானதில்லை. இது சர்வதேச கிரிகெட் மற்றும் அவர்களது நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும். உங்களுடைய ஆற்றல் எல்லோரும் பெரிய கனவுகளை காண தூண்டுகிறது. அல்லாவின் ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கும்” என்று கூரியுள்ளார்.
Wishing everyone #RamadanKareem. So proud of them! It is not easy to fast the whole day & then play the match. But they make it look effortless! An inspiration for their country & the world cricket! Your energy motivates everyone to dream big. May Allah's blessings be with you! pic.twitter.com/xoWeXmCqZu
— Shikhar Dhawan (@SDhawan25) May 9, 2019
இதற்கு ஏரளாமான கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர்களுடன் இந்திய வீரர்களும் நோன்பு துறந்த புகைப்படத்தை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
— Hikmat Khan (@HikmatK00132358) May 9, 2019
#IPLQualifier2: வேட்டைக்குத் தயாராகும் கர்ஜிக்கும் சிங்கங்கள்!
VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!
VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!
இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!
Also Watch...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, IPL 2019, Ramadan, Rashid Khan, Shikhar dhawan, SRH