வெஸ்ட் இண்டீஸ் வீரரை பங்கமாக கலாய்த்த ஷமி... வாய்விட்டு சிரித்த கோலி - வீடியோ

ICC World Cup 2019 | Sheldon Cottrell | Mohammed Shami | காட்ரெல் அவுட்டாகிய போது கேலி செய்யும் விதமாக ஷமி அவரை போன்று நக்கலாக நடந்து வந்து ஆர்மி சல்யூட் அடிப்பார்.

Vijay R | news18
Updated: June 28, 2019, 7:53 PM IST
வெஸ்ட் இண்டீஸ் வீரரை பங்கமாக கலாய்த்த ஷமி... வாய்விட்டு சிரித்த கோலி - வீடியோ
காட்ரெல் - முகமது ஷமி
Vijay R | news18
Updated: June 28, 2019, 7:53 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காட்ரெலின் செய்கையை இந்திய வீரர் முகமது ஷமி கேலி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதின. அரையிறுதி போட்டிக்கு முன்னேற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முக்கிய போட்டியாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்காத மேற்கிந்திய தீவுகள் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காட்ரெல் எதிரணியின் விக்கெட்டை வீழ்த்து போது எல்லாம் ஆர்மி வீரர்கள் ஸ்டைலில் நடந்து வந்து சல்யூட் அடிப்பார். ஒவ்வொரு முறையும் விக்கெட்களை வீழ்த்து போதும் காட்ரெல் சல்யூட் அடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்.
Loading...மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில்சஹல் வீசிய பந்தில் காட்ரெல் அவுட்டாகி வெளியேறுவார். அவரை கேலி செய்யும் விதமாக ஷமி அவரை போன்று நக்கலாக நடந்து வந்து ஆர்மி சல்யூட் அடிப்பார். இதை பார்த்த இந்திய அணியின் கேப்டன் கோலி, சஹல் சிரித்து மகிழ்ந்தனர்.

ஷமியின் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்களும் தங்களது பங்கிற்கு காட்ரெலை விமர்சித்து வருகினற்னர். மேலும் காட்ரெல் சல்யூட் அடிக்கும் செய்கையை எதிரணி வீரர்கள் சிலரும் களத்திலேயே கேலி செய்தும் உள்ளனர்.First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...