உலகக் கோப்பை: அரையிறுதி நெருங்கும் தருணத்தில் முக்கிய வீரர் விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி!

ICC World Cup 2019 | Australia | Shaun Marsh | வலைப்பயிற்சியின் போது கம்மின்ஸ் வீசிய பந்து ஷான் மார்ஷ் கையில் பலமாக தாக்கி உள்ளது.

உலகக் கோப்பை: அரையிறுதி நெருங்கும் தருணத்தில் முக்கிய வீரர் விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 3:22 PM IST
  • Share this:
உலகக்கோப்பை லீக் போட்டிகள் நாளை உடன் முடிவடைந்து அரையிறுதி போட்டிகள் வரும் 09-ம் தேதி தொடங்க உள்ளது.

உலகக் கோப்பை லீக் சுற்று போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன. 4வது இடத்தில் நியூசிலாந்து அணியும், 5வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். முதல் அரையிறுதி போட்டி ஜூலை 09-ம் தேதியும், 2-வது அரையிறுதி போட்டி ஜூலை 11-ம் தேதியும் நடைபெற உள்ளது.


இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஷான் மார்ஷ் விலகி உள்ளார். வலைப்பயிற்சியின் போது கம்மின்ஸ் வீசிய பந்து ஷான் மார்ஷ் கையில் பலமாக தாக்கி உள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சையின் போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.இதனால் உலகக் கோப்பை அணியிலிருந்து ஷான் மார்ஷ் நீக்கப்பட்டு ஹேண்ட்ஸ்கோம்ப் அணியில் இணைய உள்ளார். ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரில் ஷான் மார்ஷின் பேட்டிங் மிகப்பெரிய பலமாக இருந்தது. அரையிறுதிக்கு முன் ஷான் மார்ஷ் விலகி உள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.Also Read : 500 ரன்கள் குவித்து வங்கதேசத்தை 50 ரன்களில் சுருட்ட முயற்சிப்போம் - பாக். கேப்டன் நம்பிக்கை

Also Watch

First published: July 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading