நாங்கதான் இந்திய கிரிக்கெட்டே என்று ரவி சாஸ்திரியும் விராட் கோலியும் ஆட்டம் போட்டனர், இவர்களின் திமிரை அடக்கத்தான் டி20 உலகக்கோப்பை தொடரில் எம்.எஸ்.தோனியை மெண்ட்டாராக நியமிக்கப்பட்டார் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அடுல் வாசன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ரவி சாஸ்திரியும் விராட் கோலியும் பிளேயிங் லெவனில் யார் ஆட வேண்டும் யாரை நீக்க வேண்டும், அணித்தேர்வு உள்ளிட்ட அனைத்தையும் கட்டுப்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், பிரச்சனை கொடுக்காதவர்களை அணியில் தேர்வு செய்தது பல ரூபங்களில் தற்போது அம்பலமாகி வருகிறது, அதில் ஒன்றுதான் அடுல் வாசன் கூறுவதும்.
“தோனி அதற்காகத்தான் கொண்டு வரப்பட்டார், காரணம், இந்திய கிரிக்கெட்டே நாங்கதான், நாங்க வச்சதுதான் சட்டம் என்று அணித்தேர்வு உள்ளிட்டது முதல் அனைத்திலும் கையை வித்து இந்திய கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்தி வந்தனர்.
எனவே இவர்கள் இருவரையும் கண்காணிக்கவும் அணியை கொஞ்சம் நேர்வழிப்படுத்தி நடத்தவும் ஆள் தேவைப்பட்டது, அது தோனிதான் என்று முடிவெடுத்து அவரை டி20 உலகக்கோப்பை தொடருக்காக மெண்ட்டாராக நியமித்தனர்.
இந்தியாவில் என்ன பிரச்சனை என்றால், கொஞ்ச காலம் ஆடி கொஞ்சம் பெயர் எடுத்து விட்டால் போதும் வீரர்கள் தங்களை கடவுளாக நினைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தனி அந்தஸ்து மரியாதை கிடைக்கும். இந்த அமைப்பு முறை மாற வேண்டும்.
நல்ல மதிப்பு மிக்க ஒருவர்,அணிக்குள் வந்து இதைக்கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவும், கோலி, ரவிசாஸ்திரிக்கு கடிவாளம் போடவும்தான் தோனி மென்ட்டராக நியமிக்கப்பட்டார். ஆனால், உலகக் கோப்பையின்போது கோலியும், சாஸ்திரயும் குழம்பிப்போனார்கள்.
என்னைப்பொறுத்தவரை ரோஹித் சர்மாவை ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமித்ததில் தேர்வாளர்கள் எந்தத் தவறும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், ஒருவீரர் அதிகமான கிரிக்கெட் விளையாடிவிட்டால், அவர் கடவுளாக பார்க்கப்படுவார். அப்போது அந்த வீரர் தனக்கு சிறப்புரிமை, சிறப்பு சலுகை வேண்டும் எனஎதிர் பார்க்கிறார். இந்த முறைதான் முதலில் மாற வேண்டும்.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்காவில் வேகமும் பவுன்சும் இருக்கும் பிட்ச்கள்- பயப்படுகிறாரா புஜாரா?
நீங்கள் பிசிசிஐ அமைப்புடன் நெருக்கமாக இல்லாவிட்டாலும், நீங்கள் சிறந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். வீரர்கள் தங்களை தாழ்வாக நினைப்பதை நிறுத்த வேண்டும். பிசிசிஐ அமைப்பிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது.” என்றார் அடுல் வாசன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ravi Shastri, Virat Kohli