Home /News /sports /

வீரராக சாஸ்திரிக்கு திறமை குறைவுதான் ஆனால் பயிற்சியாளராக பெரிய ஆள்- தினேஷ் கார்த்திக் மனம் திறப்பு

வீரராக சாஸ்திரிக்கு திறமை குறைவுதான் ஆனால் பயிற்சியாளராக பெரிய ஆள்- தினேஷ் கார்த்திக் மனம் திறப்பு

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி காலத்தில், குறிப்பாக 2019 உலகக் கோப்பையின் போது விளையாடிய மூத்த இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரின் பயிற்சி முறைகளை விவரித்தார் மற்றும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியாத இரண்டு விஷயங்களைப் பற்றி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ரவி சாஸ்திரி காலத்தில், குறிப்பாக 2019 உலகக் கோப்பையின் போது விளையாடிய மூத்த இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரின் பயிற்சி முறைகளை விவரித்தார் மற்றும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியாத இரண்டு விஷயங்களைப் பற்றி தெரிவித்தார்.

    ஜான் ரைட் போலவோ, கேரி கர்ஸ்டன் போலவோ பெரிய உச்சங்களைத் தொடா விட்டாலும் இவர் தலைமைப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவில் போய் டெஸ்ட் தொடரை வென்றது ஒரு மிகப்பெரிய சாதனைதான். அதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் 2-1 என்று தொடரை வென்றிருந்தோம், கடைசியில் பும்ரா கேப்டன்சியில் இங்கிலாந்திடம் தோற்று 2-2 என்று தொடர் ஆனது, ஆனால் இது திராவிட் பயிற்சியில், ரவி சாஸ்திரிப் பயிற்சியில் இந்திய அணி ஆக்ரோஷமாகவே ஆடியது என்றால் மிகையாகாது.

    வேகமாக பேட் செய்வது புஜாராவுக்கு வராது, ஆனால் புஜாரா விக்கெட்டுகளுக்கு இடையே மோசமாக ஓடுவதை சாஸ்திரி வெளிப்படையாக பலர் முன்னிலையில் கண்டித்திருக்கிறார். நான் உன்னை உசைன் போல்ட்டாக பார்க்க விரும்பவில்லை என்பார். அதே போல் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக மோசமான ஷாட்களில் அவுட் ஆனால், பண்ட் கற்றுக்கொள்ளவில்லை எனில் கற்றுக்கொள்ள வைக்கப்படுவார் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

    இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ரவி சாஸ்திரி பயிற்சித் திறமை பற்றி கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஆடாத வீரர்களைக் கண்டால் ரவி சாஸ்திரி பொறுமை இழந்து விடுவார். அதே போல் வலைப்பயிற்சியில் ஒருமாதிரி ஆடிவிட்டு, மேட்சில் வேறு மாதிரி ஆடுபவர்களையும் சாஸ்திரிக்குப் பிடிக்காது.

    அணியிடமிருந்து தனக்கு என்ன தேவை என்பதை சாஸ்திரி அறிந்திருந்தார். ஆனால் தோல்வியடைந்தால் பொறுமை இழப்பார்,வீரர்கள் தோல்விஅடைந்தாலும் பொறுமை காக்க மாட்டார். ஆனால் அனைவரையும் நன்றாக ஆட, சிறப்பாக ஆட ஊக்குவிப்பார்.

    ஒரு வீரராக சாஸ்திரி அவ்வளவாக திறமை கொண்டவர் என்று நான் கருதவில்லை, ஆனால் பயிற்சியாளராக தன் திறமையை நிறைவு செய்தார் என்றே கூறுவேன். எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பங்காற்றினார் சாஸ்திரி. கோச் ஆக சாஸ்திரி வாழ்க்கையைவிட ஒரு பெரிய ஆளுமையாக இருந்தார்.

    வீரர்களை சிறப்பாக ஏதாவது சாதிக்க அவ்வப்போது தூண்டிக்கொண்டே இருப்பார் சாஸ்திரி” என்றார் தினேஷ் கார்த்திக்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dinesh Karthik, Ravi Shastri

    அடுத்த செய்தி