பிசிசிஐ-யிடம் முறையான அனுமதி பெறாமல் பயிற்சியில் ஈடுபட்ட வேகப்பந்து வீச்சாளர்

Shardul Thakur | கொரோனா ஊரடங்கிற்கு பின் பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய வீரர் சர்துல் தாகூர் தான்.

பிசிசிஐ-யிடம் முறையான அனுமதி பெறாமல் பயிற்சியில் ஈடுபட்ட வேகப்பந்து வீச்சாளர்
சர்துல் தாகூர்
  • Share this:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் உரிய அனுமதி பெறாமல் மைதானம் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால்  வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும்  4-ம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 4-வது கட்ட ஊரடங்கில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட சில தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்படி மகாராஷ்டிராவில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.


இதனையடுத்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், பால்கர் பகுதியில் உள்ள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். கொரோனா ஊரடங்கிற்கு பின் பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய வீரர் சர்துல் தாகூர் தான். ஆனால் இதற்காக இவர் பிசிசிஐயிடம் முறையான அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “சர்துல் தாகூர் ஒப்பந்த பட்டியலில் உள்ள வீரர். அவர் முறையாக அனுமதி பெறாமல், சொந்தமாக பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். இது சரியான நடவடிக்கை இல்லை“ என்று தெரிவித்துள்ளார்.




First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading