’ஓரினச்சேர்க்கையாளர் கமெண்ட்’ வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல் விளையாட ஐசிசி தடை!

#ShannonGabriel suspended for four ODIs after breaching #ICC Code of Conduct | வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷானோன் கேப்ரியல் மீது ஐசிசி நடவடிக்கை பாய்ந்தது.

news18
Updated: February 13, 2019, 8:52 PM IST
’ஓரினச்சேர்க்கையாளர் கமெண்ட்’ வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல் விளையாட ஐசிசி தடை!
கேப்ரியலுக்கு தடை. (Images:Getty)
news18
Updated: February 13, 2019, 8:52 PM IST
கிரிக்கெட் போட்டியின்போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ஓரினச்சேர்க்கையாளர் என திட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்  கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் விளையாடத் தடைவிதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 விதமான போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி செயிண்ட்.லூசியா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இடையே ரன் எடுக்க ஓடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டைப் பார்த்து, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷானோன் கேப்ரியல் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

West Indies Vs England, வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
டெஸ்ட் போட்டியில் மோதல். (Twitter)


அதற்கு “இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் தவறில்லை” என ஜோ ரூட் கூறியுள்ள ஆடியோ மட்டும் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. ஆனால், கேப்ரியல் என்ன விமர்சித்தார் என அதில் பதிவாகவில்லை. இதுபற்றி ஜோ ரூட் கள அம்பயரிடம் புகார் தெரிவித்தார். உடனே ஷானோன் கேப்ரியலை அழைத்த அம்பயர், இதுபோன்ற தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.

இந்நிலையில், கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட ட்வீட்டில், “ ஐசிசி விதிமுறை 2.13-ன்கீழ் ஷானோன் கேப்ரியல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. களநடுவர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது. இறுதிமுடிவு எடுக்கும் வரை ஐசிசி இதுபற்றி மேலும் கருத்துக்களைத் தெரிவிக்காது,” என கூறப்பட்டது.

Shannon Gabriel, ஷானோன் கேப்ரியல்
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷானோன் கேப்ரியல். (Twitter)
Loading...
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷானோன் கேப்ரியலுக்கு 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தோனி செய்த ஸ்டம்பிங் அவுட் இல்லை? நடுவர் தீர்ப்பு குறித்து ஐசிசி ஆய்வு!!!

Also Watch...

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...