காலில் ரத்த காயத்துடன், இறுதி வரை சென்னை அணிக்காக போராடிய வாட்சன்! கொண்டாடும் ரசிகர்கள்

கேப்டன் தோனி உட்பட அனைத்து முக்கிய வீரர்களும் அவுட்டான நிலையில் தனிஒருவராக அணியின் வெற்றிக்காக வாட்சன் இறுதிவரை போராடினார்.

Vijay R | news18
Updated: May 14, 2019, 1:03 PM IST
காலில் ரத்த காயத்துடன், இறுதி வரை சென்னை அணிக்காக போராடிய வாட்சன்! கொண்டாடும் ரசிகர்கள்
ரத்தக் காயத்துடன் ஷேன் வாட்சன்
Vijay R | news18
Updated: May 14, 2019, 1:03 PM IST
ஐ.பி.எல் கோப்பை வென்ற மும்பை அணியினரின் வெற்றியை விட ரத்தம் வடிய இறுதிவரை போராடிய வாட்சனின் புகைப்படம் தான் இணையத்தில் தற்போது டாப் டிரெண்டிங்கில் உள்ளது.

ஐ.பி.எல் தொடர் இறுதிப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோனிக்கு ரன்அவுட் கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தோல்விக்கு காரணம் 3வது அம்பயரின் தவறான முடிவு என்று பலர் கொந்தளித்து கொண்டிருந்த நிலையில் தான் வாட்சனின் புகைப்படம் சி.எஸ்.கே ரசிகர்களின் அனைவரின் கண்ணையும் கலங்க வைத்தது.

இறுதிப் போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து வடியும் ரத்தத்துடன் வாட்சன் விளையாடும் போட்டோ தான் தற்போது டாப் டிரெண்டிங்கில் உள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் நான் சரியாக விளையாட போதும் கேப்டன் தோனி தொடர்ந்து தனக்கு வாய்ப்பளித்தார் என்று வாட்சன் ஏற்கனவே கூறியிருந்தார். இதன் காரணமாகவே காயம் ஏற்பட்ட போதும் வாட்சன் கடைசி வரை சி.எஸ்.கே அணியின் வெற்றிக்காக போராடி உள்ளார்.







கேப்டன் தோனி உட்பட அனைத்து முக்கிய வீரர்களும் அவுட்டான நிலையில் தனிஒருவராக அணியின் வெற்றிக்காக வாட்சன் இறுதிவரை போராடினார். கடைசியில் வாட்சனும் எதிர்பாராதவிதமாக ரன்அவுட்டானதே மும்பையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. போட்டி முடிந்த சிகிச்சை எடுத்து கொண்ட வாட்சன் முழங்காலிரல் 6 தையல்கள் போடபட்டதாக ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



சென்னை அணி கோப்பையை இழந்த போதும் வாட்சனின் போராட்ட குணத்தை பாராட்டி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
First published: May 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...