கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே இந்தியாவுக்கு எதிராக 1992-ம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் முதன் முதலில் அறிமுகம் ஆனார். அன்றைய தினம் அவர் வீசிய முதல் ஓவர் தற்போது வைரலாகி வருகிறது.
52 வயதாகும் வார்னே மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் தாய்லாந்தில் உயிரிழந்தார். டெஸ்டில் 708 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை வார்னே பெற்றுள்ளார். 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகளை வார்னே எடுத்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் 1,018 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 3,154 ரன்களும் வார்னே எடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த அளவில் 1000-க்கும் அதிகமான சர்வதேச விக்கெட்டுகளை வார்னே சாய்த்துள்ளார்.
இதையும் படிங்க -
IPL 2022 Full Schedule: ஐ.பி.எல் திருவிழா மார்ச் 26-ல் தொடங்குகிறது - முதல் போட்டியில் சென்னை- கொல்கத்தா மோதல்
1992-ல் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் 22வது வயதில் வார்னே அறிமுகம் ஆனார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு எதிராக அவர் வீசிய ஓவர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியில் வார்னேவின் பந்து வீச்சை இந்திய வீரர் ரவி சாஸ்திரி விளாசித் தள்ளினார்.
இதையும் படிங்க -
மார்ச் 26-ல் தொடங்கும் ஐ.பி.எல்: சென்னை அணிகள் மோதும் போட்டிகள் எப்போது- முழு விவரம்
45 ஓவர் வீசிய வார்னே, 150 ரன்களை வாரிக்கொடுத்தார். இந்தப் போட்டியில் ரவி சாஸ்திரி இரட்டைச் சதம் அடித்தார். அதில் பெரும்பாலான ரன்கள் வார்னேவின் பந்து வீச்சில் கிடைத்தவை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.