Home /News /sports /

ஷேன் வார்னுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு- ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

ஷேன் வார்னுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு- ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

ஷேன் வார்ன்

ஷேன் வார்ன்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சு லெஜண்ட் ஷேன் வார்ன் நேற்று தாய்லாந்து வில்லா ஒன்றில் திடீரென மரணம் அடைந்தார். இது கிரிக்கெட் உலகை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
    ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சு லெஜண்ட் ஷேன் வார்ன் நேற்று தாய்லாந்து வில்லா ஒன்றில் திடீரென மரணம் அடைந்தார். இது கிரிக்கெட் உலகை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன.

    இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று ஆஸ்திரெலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றியதுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

    52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்ன் தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று இறந்து கிடந்தார். அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது.



    ஷேன் வார்னின் மரணத்தை அவரது தனிப்பட்ட விஷயங்களை நிர்வகித்து வரும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: மரண செய்தியை கடைசி ட்விட்டாக பதிவிட்ட ஷேன் வார்ன்... ஜாம்பாவனின் சோக வரிகள்


    இந்த நிலையில், ஷேன் வார்னுவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் ஷேன் வார்னும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Shane Warne

    அடுத்த செய்தி