Home /News /sports /

ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலக் கேப்டன் என்று ஷேன் வார்ன் குறிப்பிடும் வீரர் யார் தெரியுமா?

ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலக் கேப்டன் என்று ஷேன் வார்ன் குறிப்பிடும் வீரர் யார் தெரியுமா?

ஷேன் வார்ன்.

ஷேன் வார்ன்.

பேட்டிங்கில் தற்போது சொதப்பி வரும் ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலக் கேப்டன் என்று ஷேன் வார்ன் குறிப்பிடும் வீரர் பெயர் நம் அனைவருக்கும் உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, “ஏன் ஷேன் வார்னுக்கு என்ன ஆயிற்று?” என்று நாம் கேள்வி எழுப்பவும் காரணமாகியுள்ளது

மேலும் படிக்கவும் ...
    பேட்டிங்கில் தற்போது சொதப்பி வரும்,  ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலக் கேப்டன் என்று ஷேன் வார்ன் குறிப்பிடும், வீரர் பெயர் நம் அனைவருக்கும் உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, “ஏன் ஷேன் வார்னுக்கு என்ன ஆயிற்று?” என்று நாம் கேள்வி எழுப்பவும் காரணமாகியுள்ளது.

    மார்னஸ் லபுஷேன் தான் ஸ்மித், வார்னருக்குப் பிறகு சீரான முறையில் ரன்களை எடுத்து வருகிறார், கிரிக்கெட் நுணுக்கங்கள் அறிந்தவர் இவர்தான். எனவே ஷேன் வார்ன் இவரைக் குறிப்பிட்டு எதிர்கால ஆஸ்திரேலியக் கேப்டன் என்றாலும் பரவாயில்லை.

    ஆனால் ஷேன் வார்ன் எதிர்காலக் கேப்டன் என்று குறிப்பிடுவது யாரைத்தெரியுமா, இந்தியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் 7, 38, 17, என்று திணறும் ட்ராவிஸ் ஹெட் என்ற இடது கை பேட்ஸ்மெனைத்தான் ஷேன் வார்ன் எதிர்கால ஆஸ்திரேலிய கேப்டன் என்கிறார்.

    ஆஸ்திரேலிய ஊடகமான ஃபாக்ஸ் கிரிக்கெட்டுக்கு ஷேன் வார்ன் கூறும்போது, “ஹெட் எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதை நாம் அறிவோம், எதிர்கால ஆஸ்திரேலிய கேப்டனாகவும் ஆகும் வாய்ப்புள்ளவர். ஆனால் இப்போதைக்கு அவரை நான் அணியில் எடுக்க மாட்டேன். அவரது பேட்டிங் உத்தியில் குறைபாடுகள் உள்ளன, அதை அவர் களைந்தால்தான் அவரை தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.

    முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸும் வார்னின் கருத்தை ஏற்று, “ட்ராவிஸ் ஹெட் இவர் உள்நாட்டுக் கிரிக்கெட்டுக்குத் திரும்ப வேண்டும். வெளியே செல்லும் பந்தை காலை நகர்த்தாமல் தொடுகிறார். அவரால் மட்டையைக் கொண்டு செல்லாமல் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

    டெஸ்ட்டில் தன் இடத்துக்காக போராடி ஆடும் போது இப்படி அழுத்தத்தினால் ஆட்டமிழக்க நேரிடும். முதலில் மனதிலிருது பாதுகாப்பு அச்சுறுத்தலை தூக்கி எறிய வேண்டும் அவர். எனவே மனத்தடை நீங்கினால்தான் அவர் டெஸ்ட் போட்டிக்குள் வர வேண்டும்” என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, India vs Australia, Shane Warne

    அடுத்த செய்தி