மறைந்த புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னின் இறுதிச் சடங்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார்ன் தனது சொந்த மைதானத்தில் வரலாற்று 700வது டெஸ்ட் விக்கெட் உட்பட பல கிரிக்கெட் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 9News இன் அறிக்கையின்படி, புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளருக்குப் பிரியாவிடை அளிக்க, MCG சுமார் 100,000 பேருக்கு இடமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சனிக்கிழமையன்று, வார்னின் "துக்கமான மற்றும் திடீர் இழப்பால்" நாட்டு மக்கள் "திகைப்படைந்துள்ளனர்" என்று கூறினார், மேலும் கிரிக்கெட் வீரருக்கு அரசு மரியாதையுடன்இறுதி சடங்கு செய்யப்படும் என்று அறிவித்தார். 52 வயதான வார்னின் மரணத்தைக் குறிக்கும் வகையில், "அவர் நமது நாட்டின் மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் ஒருவர்" என்று மாரிசன் கூறினார்.
விக்டோரியா பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறும்போது, ஏற்கனவே மாநில அரசாங்கத்தின் சலுகையை ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றார்.
நமது மாநிலம் மற்றும் நாட்டிற்கு, மற்றும் விளையாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு அஞ்சலி செலுத்த இது ஒரு வாய்ப்பாக இருக்கும்" என்று ஆண்ட்ரூஸ் கூறினார்,
முன்னதாக, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள சதர்ன் ஸ்டாண்டின் பெயர் எஸ்.கே. வார்ன் ஸ்டேண்ட் என மாற்றப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஷேன் வார்ன் விளையாட்டில் செய்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவர் ஹாட்ரிக் மற்றும் 700வது விக்கெட்டுகளை எடுத்த இடமான MCG-யில் உள்ள கிரேட் சதர்ன் ஸ்டாண்டிற்கு வார்ன் ஸ்டேண்ட் என்று பெயர் மாற்றப்படும் என்று ஆண்ட்ரூஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“எஸ்.கே. வார்ன் ஸ்டாண்ட் ஒரு அற்புதமான விக்டோரியனுக்கு நிரந்தர அஞ்சலியாக இருக்கும்." என்றார் அவர்.
தாய்லாந்தின் கோ சாமுய் என்ற இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் வார்ன் மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவர் தாய்லாந்து சர்வதேச மருத்துவமனைக்கு மாலை 6:00 மணிக்கு (1100 GMT) கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.